காதலில் தோல்வியடைந்தவனின் புலம்பல்தான் ‘செஞ்சுட்டாளே என் காதல’

காதலில் தோல்வியடைந்தவனின் புலம்பல்தான் ‘செஞ்சுட்டாளே என் காதல’

எஸ்.பி.எண்ட்டெர்டெயின்மெண்ட் பட நிறுவனத்தின் சார்பில் எஸ்.பாலசுப்ரமணியம் தயாரித்திருக்கும் புதிய படம் ‘செஞ்சுட்டாளே என் காதல’.

ஐம்பதிற்கும் மேற்பட்ட குறும்படங்களில் நடித்தும் சில திரைப்படங்களில் உதவி இயக்குநராகவும் பணியாற்றிய அனுபவம் கொண்ட எழில் துரை இந்தப் படத்தில் ஹீரோவாக அறிமுகமாகிறார். மேலும் இவரே இந்தப் படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியிருப்பதும் கூடுதல் சிறப்பு.  இவரது திரைக்கதை தமிழ் சினிமாவில் கட்டுடைப்புகளை நிகழ்த்தக் கூடியதாக அமைந்திருக்கும்.

photo 4

கதாநாயகியாக விஜய் டிவி ஆஃபீஸ் சீரியலில் நடித்த மதுமிளாவும் அவரது அம்மாவாக ‘மெட்ராஸ்’ மற்றும் ‘கத்தி’யில் நடித்த ரமாவும் அப்பாவாக ‘மெட்ராஸ்’, ‘மாரி’ மற்றும் ‘கபாலியி’ல் நடித்த மைம் கோபியும் நடித்துள்ளனர்.

கதாநாயகனின் அப்பாவாக அஜய் ரத்னம் மற்றும் ‘நாடோடிகள்’ அபிநயா ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். இவர்கள் தவிர ‘கயல்’ வின்சென்ட், அர்ஜுனன்  போன்றோர் துணைக் கதாப்பாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.

photo 1

ஒளிப்பதிவு – மணீஷ் மூர்த்தி, இசை – ராஜ் பரத், படத்தொகுப்பு – லாரன்ஸ் கிஷோர், சண்டை பயிற்சி – ஹரி தினேஷ், நடனம் – ஸ்ரீகிரீஷ், கலை – ஸ்ரீகாந்த் கோபால், தயாரிப்பு நிர்வாகம் – அருண் அருணாச்சலம், பி.ஆர்.ஓ. – யுவராஜ் ஆகியோர் பணியாற்ற பாலசுப்ரமணியன் தயாரித்துள்ளார்.

படத்தின் தலைப்பு சற்று வித்தியாசமாக இருந்தாலும் இது பெண்களை அவதூறு செய்கிற கதையல்ல. காதல் குறித்த மற்ற தமிழ்த் திரைப்படங்களிலிருந்து முற்றிலும் வேறுபட்ட கதையம்சம் கொண்டது.

photo 3

காதலில் தோல்வியடைந்த கதாநாயகன் தன் வாழ்வில் சந்திக்கின்ற பிரச்சனைகளும், இறுதியில் அவனுக்குக் கிடைக்கின்ற தீர்வும் சமீப காலங்களில் காதல் மலினப்பட்டு வருகிறதா என்பதற்கான விடையும்தான் படத்தின் கதைக் கருவாகும். ஆண், பெண் இருபாலருக்கும் இயல்பாக கருத்து சொல்லும் விதத்தில் இந்த ‘செஞ்சிட்டாளே என் காதல’ அமையும்.

இதன் படப்பிடிப்பு சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தில் நடந்து முடிந்துள்ளது.

Our Score