full screen background image

ஹன்ஸிகா நடிக்கும் புதிய படம் துவங்கியது..!

ஹன்ஸிகா நடிக்கும் புதிய படம் துவங்கியது..!

வாலு’, ‘ஸ்கெட்ச்’, ‘சங்கத் தமிழன்’ போன்ற படங்களை இயக்கிய இயக்குநரான விஜய் சந்தர், தற்போது தயாரிப்பாளராக களமிறங்கியுள்ளார்.

ஃபிலிம் வொர்க்ஸ் நிறுவனத்தின் சார்பில் விஜய்சந்தர் தயாரிக்கும் இந்த முதல் படத்தில் ஹன்சிகா கதாநாயகியாக நடிக்கிறார்.

பிரபல ஒளிப்பதிவாளரான சக்தி இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார். இரட்டை இயக்குநர்களான சபரி கிரீசன், சரவணன் இயக்குகிறார்கள்.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் இன்று துவங்கியது.

தயாரிப்பாளர் கலைப்புலி எஸ். தாணு கேமராவை இயக்க, விஜய் சேதுபதி  கிளாப் போர்டை அடிக்க, இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் முதல் காட்சியை இயக்கினார்.

இதர நடிகர்கள் மற்றும் தொழில் நுட்பக் கலைஞர்கள் பற்றிய விவரம் விரைவில் வெளியாகும்.

Our Score