“அஜீத்துடன் நடிக்க வேண்டும்” – நடிகை பிந்து மாதவியின் லட்சியம்..!

“அஜீத்துடன் நடிக்க வேண்டும்” – நடிகை பிந்து மாதவியின் லட்சியம்..!

நடிகர் அஜீத்துடன் நடிப்பதுதான் தனது வாழ்நாள் லட்சியம்…” என்கிறார் நடிகை பிந்து மாதவி.

இது பற்றி அவர் அளித்துள்ள பேட்டியில், “நான் நூறு சதவிகிதம் அஜீத்தின் மிகத் தீவிரமான ரசிகை. சின்ன வயதில் இருந்தே எனக்குப் பிடித்த கனவுக் காதலர்ன்னா அது அஜீத்துதான். அவ்வளவு அழகானவர் அவர். அந்த அழகில் மயங்கி இப்போ அவரோட மிகப் பெரிய ரசிகையாகிவிட்டேன்.

அவர் பின்க் மாதிரி ஒரு படத்துல துணிஞ்சு நடிச்சிருக்கார். அவர் நடித்த நேர் கொண்ட பார்வை எனக்கு அவ்வளவு பிடிச்சிருந்தது.

என்னோட லட்சியத்துல ஒண்ணு.. அஜீத் ஸாரோட ஒரு படத்துலயாச்சும் நடிச்சிரணும்ன்றதுதான். என்னுடைய இந்தக் கனவு நிச்சயமாக அடுத்த வருஷம் நிறைவேறிரும்ன்னு நம்புகிறேன்..” என்று சொல்லியிருக்கிறார்.

Our Score