full screen background image

“என்னை சீக்கிரமா சாகடிக்காதீங்க.. ப்ளீஸ்..” – மீடியாக்களிடம் கெஞ்சும் நடிகை பிந்து மாதவி..!

“என்னை சீக்கிரமா சாகடிக்காதீங்க.. ப்ளீஸ்..” – மீடியாக்களிடம் கெஞ்சும் நடிகை பிந்து மாதவி..!

உண்மை உறங்கிக் கொண்டிருக்கும்போது வதந்தி ஊரைச் சுற்றி வந்துவிடும் என்பார்கள். அதிலும் வதந்தி கிளப்புவர்கள் எங்கிருந்துதான் செய்தியைத் தருகிறார்களோ தெரியவில்லை.. அது உண்மையா, பொய்யா என்றுகூட சோதித்துப் பார்க்காமல் செய்தியை முந்தித் தருவது நாங்கள்தான் என்கிற பெயரைப் பெறுவதற்காக ஊடகங்கள் செய்கின்ற வேலைகளினால் மீடியா என்கிற வார்த்தைக்கே அர்த்தமில்லாமல் போய்விட்டது..

ஒரு முக்கிய பிரமுகர் பற்றிய சோகமான செய்தியென்றால் அதனை உறுதிப்படுத்திவிட்டுத்தான் வெளியிட வேண்டும் என்கிற அடிப்படை நாகரிகத்தைக்கூட சில ஊடகங்கள் பின்பற்றுவதில்லை. கிடைத்த செய்தியை அப்படியே வெளியிட்டுவிட்டு பின்பு செய்தி தவறானால் அதையும் வெளியிட்டு தங்களுடைய ‘நடுநிலைமை’யைத் தெரிவிக்கிறார்கள்.

ஊடகங்களின் விளம்பரப் பசிக்கு இன்றைக்கு சிக்கியவர் நடிகை பிந்து மாதவி. இன்று மாலை திடீரென்று சில தெலுங்கு டிவி சேனல்களில் மட்டும் நடிகை பிந்து மாதவி மிகவும் சீரியஸாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக ஸ்குரால் நியூஸ் ஓடியும், செய்தியறிக்கையும் வாசிக்கப்பட்டன.

செய்தியறிந்து அதிர்ச்சியான லட்சக்கணக்கானோரில் நடிகை பிந்து மாதவியும் ஒருவர் என்பதுதான் சோகத்திலும் சோகமான செய்தி. நாளை சென்னையில் நடைபெறவிருக்கும் ‘சவாலே சமாளி’ படத்தின் பாடல் வெளியீட்டு விழாவுக்கான பிரமோஷன் வேலைகளில் ஈடுபட்டு மீடியாக்களுக்கு பேட்டியளித்துக் கொண்டிருக்கும் நிலையில் இப்படியொரு செய்தியை வெளியிட்டால் அவருக்கு எப்படி இருக்கும்..?

“ஐயா சாமிகளா.. நான் நல்லாத்தான் இருக்கேன். இங்க சென்னைலதான் இருக்கேன். நாளைக்கு என்னோட படத்தின் ஆடியோ ரிலீஸ் நிகழ்ச்சிக்காக வந்திருக்கேன். இன்னும் உசிரோடதான் இருக்கேன். அவ்வளவு சீக்கிரமா என்னை சாகடிக்காதீங்க ப்ளீஸ்..” என்று கெஞ்சிக் கேட்டுக் கொண்டிருக்கிறார்.

பாவம்.. இவ்ளோ நல்ல இதயத்தை சீக்கிரமா சாகடிக்கிறதுக்கு இந்த ஊடகங்களுக்கு எப்படி மனசு வருது..? 

Our Score