full screen background image

அமலா பால் வெப் சீரிஸ், திரைப்படம் என்று பிஸியோ பிஸி..!

அமலா பால் வெப் சீரிஸ், திரைப்படம் என்று பிஸியோ பிஸி..!

நடிகை அமலா பால்,  தற்போது மிக, மிக பிஸியான நாயகியாக மாறியிருக்கிறார்.

திரைப்படங்களுடன், வெப் சீரிஸ்களிலும் தன் கவனத்தைச் செலுத்தி வருகிறார். அவர் தேர்ந்தெடுத்து நடிக்கும், கதைகளும், கதாப்பாத்திரங்களும் அவரின் மதிப்பையும், நட்சத்திர அந்தஸ்தையும் கூட்டுவதாகவே அமைந்துள்ளது.

நேர்த்தியான, தரமான கதைகள், கனமான கதாபாத்திரங்கள் என ரசிகர்கள் கொண்டாடும் கதாப்பாத்திரங்களை வெப் சீரிஸ்களிலும், திரைப்படங்களிலும் செய்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார் அமலா பால்.

தற்போது இவர் கன்னடத்தில் ‘யூ டர்ன்’(U Turn) படம் மூலம் புகழ் பெற்ற இயக்குநர் பவன் குமார் இயக்கும், புதிய வெப் சீரிஸான குடி யெடமைதே’(Kudi yedamaithe) வெப் சீரிஸில் முதன்மை கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார்.

8 பகுதிகள் கொண்ட இந்த வெப் சீரிஸ் தொடர் ஆஹா(aha) தளத்தில் ஒளிபரப்பாகவுள்ளது. இத்தொடர், தெலுங்கு ரசிகர்கள் இதுவரை கண்டிராத வகையிலான, ஃபேண்டஸி திரில்லராக உருவாகிறது.

இத்தொடரில் அமலா பால் ஜோடியாக ராகுல் விஜய் நடிக்கிறார். இது மற்ற திரைப்படங்கள், தொடர்கள் போல வழக்கமான  ஹீரோ, ஹீரோயின் கதாப்பாத்திரங்கள் அல்ல.

இதன் கதை ஒரு காவல் துறை அதிகாரிக்கும், டெலிவரி பையனுக்கும் நடக்கும்  டைம் லூப்பை அடிப்படையாகக் கொண்டது.

இது தவிர இயக்குநர் நந்தினி ரெட்டி இயக்கும் Netflix ஆந்தாலஜி சீரிஸிலும், அமலா பால் முதன்மை வேடத்தில் நடிக்கிறார்.

தற்போது தனது சொந்த தயாரிப்பில் உருவாகும் ‘கடாவர்’(cadaver) படத்தில் நடித்து முடித்துள்ளார் அமலா பால்.

தற்போது இந்தப் படத்தின் போஸ்ட் புரடக்சன் வேலைகள் தீவிரமாக நடந்து வரும் வேளையில், இப்படத்தின் ரிலீஸ் அறிவிப்பு மிக விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவுள்ளது.

இந்த படங்கள், தொடர்கள் தவிர Jio Studios & Vishesh Films நிறுவன தயாரிப்பில் பாலிவுட்டிலும் அமலா பால் அறிமுகமாகவுள்ளார்.

Our Score