full screen background image

ஆங்கிலப் படத்தில் தனுஷூக்கு ஜோடியாக நடித்திருக்கும் இன்னொரு ஐஸ்வர்யா..!

ஆங்கிலப் படத்தில் தனுஷூக்கு ஜோடியாக நடித்திருக்கும் இன்னொரு ஐஸ்வர்யா..!

ஆங்கில எழுத்தாளர் மார்க் கிரேனி என்பவர் எழுதிய ‘தி கிரே மேன்’ என்கிற நாவலை அடிப்படையாக கொண்டு உருவாகி வரும்  ‘தி கிரே மேன்’ என்ற ஆங்கிலப் படத்தில் நடித்து வருகிறார் தனுஷ்.

இந்தப் படத்தில் தனுஷுக்கு ஜோடியாக இந்திய நடிகையான ஐஸ்வர்யா சோனார் நடித்துள்ளாராம். இவர் மராத்தியில் மிக ஹிட்டான காமெடி படமான கே ரி ராஸ்கலா’ படத்தில் நடித்தவர்.

இந்த மராத்தி மொழி படத்தை தயாரித்தவர் நடிகை பிரியங்கா சோப்ரா என்பது குறிப்பிடத்தக்கது.

ஐஸ்வர்யா நடிகை மட்டுமல்ல, தேசிய விருது பெற்ற வென்டிலேட்டர் படத்தில் அதன் இயக்குநரான ராஜேஷ் மபுஸ்கரிடம் உதவி இயக்குராகவும் பணியாற்றியவர்.

‘தி கிரே மேன்’ படத்தில் மிக சிறிய ரோல் என்றாலும், முக்கியமாக ரோல் என்பதால் இப்படத்தில் நடிக்க ஐஸ்வர்யா ஒப்புக் கொண்டாராம்.

இவர் நடிக்கும் காட்சிகளின் முதல் ஷாட் எடுக்கவே கிட்டதட்ட 6 மாதங்கள் ஆனதாம். தி கிரே மேன்’ படத்தில் தான் நடிக்கும் காட்சிகளை நடித்து முடித்து விட்டதாக கூறியுள்ள ஐஸ்வர்யா, அந்தக் கேரக்டர் பற்றிய எந்த தகவலையும் வெளியிடவில்லை.

இந்த மெகா பட்ஜெட் படத்தில் ஹாலிவுட் நடிகர்களான ரயான் காஸ்லிங், கிறிஸ் ஈவென்ஸ் ஆகியோருடன் வாக்னர் மவுரா, ஜூலியா பட்டர்ஸ் மற்றும் ஜெஸிகா ஹென்விக் ஆகியோரும் நடிக்கின்றனர்.

இப்படத்தில்  கோர்ட் ஜென்ட்ரி என்ற கதாபாத்திரத்தில் ரேயான் காஸ்லிங்  நடிக்கிறார். அவரை கொலை செய்ய நினைக்கும் குழுவின் தலைவனாக தனுஷ் நடித்து வருகிறார்.  இப்படத்தை அந்தோனி ரூஸோ மற்றும் ஜோயி ரூஸோ சகோதரர்கள் இயக்கி வருகின்றனர்.

படத்தின் படப்பிடிப்பு  அமெரிக்காவில் நடந்து வந்த நிலையில், தற்போது ஸ்பெயின் நாட்டில் அடுத்தக் கட்ட படப்பிடிப்பினை தொடங்கி நடத்தி வருகிறார்கள். விரைவில் மற்றொரு நாட்டில் படப்பிடிப்பை நடத்த உள்ளனர்.

 
Our Score