2009-ம் ஆண்டு மலையாளத்தில் வெளிவந்த ‘வெள்ள தூவல்’ என்ற படத்தின் மூலம் திரையுலகத்திற்கு அடியெடுத்து வைத்தார் நடிகை ஆத்மியா.
தமிழில் சிவகார்த்திகேயனுடன் ‘மனம் கொத்திப் பறவை’ படத்தில் நாயகியாக அறிமுகமானார். இதன் பின்பு தமிழில் ‘போங்கடி நீங்களும் உங்க காதலும்’, ‘காவியன்’, ‘வெள்ளை யானை’ ஆகிய படங்களில் நடித்திருக்கிறார்.
மலையாளத்தில் ‘ரோஸ் குற்றைநால்’, ‘அமீபா’, ‘ஜோஸப்’, ‘நாமம்’, ‘மார்கோ மர்தானி’, ‘அவியல்’ போன்ற படங்களிலும் நடித்திருக்கிறார்.
இதில் ‘வெள்ளை யானை’ என்ற தமிழ்ப் படமும், ‘அவியல்’ என்ற மலையாளப் படமும் இன்னமும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ஆத்மியாவுக்கு கப்பலில் பணியாற்றும் சனூப் என்பவருடன் திருமணம் நிச்சயமாகி இன்று காலை கேரளாவில் கண்ணூரில் திருமணம் நடந்தேறியுள்ளது.
மணமக்களுக்கு நமது வாழ்த்துக்கள்..!