full screen background image

நடிகர் சங்கத் தேர்தல் கால அட்டவணை அறிவிப்பு..!

நடிகர் சங்கத் தேர்தல் கால அட்டவணை அறிவிப்பு..!

தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு அக்டோபர் 18-ம் தேதி தேர்தல் நடைபெறும் என்று இரு நாட்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டது. இந்தத் தேர்தலுக்கான அட்டவணையை தேர்தல் அதிகாரி பத்மநாபன் நேற்று வெளியிட்டார்.

“உயர்நீதிமன்ற உத்தரவின்படி, சங்கங்களின் பதிவாளர் தயார் செய்த அங்கத்தினர்கள் பட்டியலில் உள்ளவர்கள் மட்டுமே வேட்பு மனு தாக்கல் செய்ய முடியும்.

தேர்தலில் போட்டியிட விரும்புவோர் செப்டம்பர் 30-ம் தேதி முதல் அக்டோபர் 3-ம் தேதிவரை தேர்தல் அலுவலகத்தில் வேட்பு மனுவை ரூ.100 செலுத்தி பெற்றுக் கொள்ளலாம்.

தேர்தலில் போட்டியிட விரும்புவோர் அக்டோபர் 11-ம் தேதி காலை 11 மணி முதல் 3-ம் தேதி மாலை 5 மணிவரை தேர்தல் அலுவலகத்தில் வேட்பு மனுவினை தாக்கல் செய்யலாம்.

தேர்தலில் போட்டியிட தாக்கலான வேட்பு மனுக்கள் 4-ம் தேதி காலை 11 மணிக்கு பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படும்.

மாலை 4 மணிக்கு போட்டியிட தகுதியுள்ள வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும்.

போட்டியில் இருந்து விலகிக் கொள்ள விரும்புபவர்கள் 7-ம் தேதி விலகல் கடிதத்தை கொடுக்கலாம்.

இறுதியாக போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் 8-ம் தேதி வெளியிடப்படும்.

தபால் மூலம் அனுப்பப்படும் ஓட்டுகள் 17-ந் தேதி மாலை 5 மணிக்குள் சங்க அலுவலகத்திற்கு வந்துசேரும்படி அனுப்ப வேண்டும்.

தேர்தலில் ஓட்டுப் போட வரும் உறுப்பினர்கள் புகைப்படம் ஒட்டிய உறுப்பினர் அட்டையை தவறாமல் கொண்டு வர வேண்டும்.

ஓட்டுப்பதிவு செய்யும் இடத்தில் செல்போன் உபயோகிக்கக் கூடாது.”

இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Our Score