full screen background image

தீபாவளி ரேஸில் ஆரியின் ‘பகவான்’ படமும் குதிக்கிறது..!

தீபாவளி ரேஸில் ஆரியின் ‘பகவான்’ படமும் குதிக்கிறது..!

AMMANYA MOVIES நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர்  C.V.மஞ்சுநாதா தயாரிக்கும் திரைப்படம் ‘பகவான்.’

மித்தாலஜிக்கல் திரில்லர் வகையில் பிரம்மாண்டமான தயாரிப்பில் உருவாகும் இப்படத்தில் ஆரி அர்ஜுனன்  முதன்மை கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார்.

‘ரங்கஸ்தலம்’ படத்தின் நாயகியான பூஜிதா பொன்னாடா நாயகியாக நடிக்கிறார். இவர்களுடன் ஜெகன், முருகதாஸ், யோக் ஜேபி, சம்பத் ராம், லக்கி நாராயணன், அலெக்ஸ், அபிஷேக், சத்யா, மாஸ்டர்’ பாண்டி, அஜய் தத்தா ஆகியோர் முக்கியப் பாத்திரங்களில் நடிக்கிறார்கள். சிறப்பு தோற்றத்தில் கோப்ரா’ படத்தில் நடிக்கும் ஆங்கில நடிகர் ஜேம்ஸ் பாரட் வில்லனாக நடிக்கிறார்.

இயக்கம் – காளிங்கன், ஒளிப்பதிவு – முருகன் சரவணன், இசை – பிரசன் பாலா, படத் தொகுப்பு – அதுல் விஜய், நடன  இயக்கம் – கலா மாஸ்டர், சண்டை இயக்கம் – ஹரி தினேஷ், பாடல்கள் – சம்பத்.G, உடை வடிவமைப்பு  – வினயா தேவ், ஸ்டில்ஸ் – மணிகண்டன், லைன் புரடியூசர் – முருகன் சரவணன், இணை தயாரிப்பு – V.ஶ்ரீனிவாசா, தயாரிப்பு  – C.V. மஞ்சுநாதா.

இப்படத்தில் இதுவரையிலும் தோன்றியிராத  வகையில் வித்தியாசமான தோற்றத்தில்  நாயகன் ஆரி அர்ஜுனன்  நடித்திருக்கிறார். ரசிகர்களை இருக்கை நுனியில் இருத்தி வைக்கும் அளவுக்கு பரபர திரில்லர் திரைப்படமாக இப்படம் உருவாகியுள்ளது.

சமீபத்தில் இப்படத்திற்காக கலா மாஸ்டர் நடன அமைப்பில்,  மிகப் பிரம்மாண்டமான பாடல் காட்சி படமாக்கப்பட்டது. இப்பாடலுக்கென்றே 3 நாட்கள் பிரத்யேகமாக பயிற்சிகள் எடுத்துக் கொண்டு அந்தப் பாடல் காட்சியில் பங்கேற்றுள்ளார் நடிகர் ஆரி அர்ஜீனன்.  

ஆங்கில நடிகர் ஜேம்ஸ் பாரட் வில்லனாக நடிக்க, படத்தின் சண்டை காட்சிகள் ரசிகர்களுக்கு பிரமிப்பை ஏற்படுத்தும் வகையில் படமாக்கப்பட்டுள்ளது.  

தற்போது இப்படத்தின் இறுதி கட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. வரும் தீபாவளிக்கு படத்தை வெளியிட படக் குழு திட்டமிட்டுள்ளது.

இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் பிக் பாஸ்’ நிகழ்ச்சியில் வெளியானபோதே பெரும் வரவேற்பைப் பெற்றது நினைவிருக்கலாம்.

 
Our Score