விலங்குளை மையமாக வைத்து படம் இயக்கப் போவதாக நடிகர் விஷால் அறிவித்துள்ளார்.
இது குறித்து விஷால் அளித்த பேட்டியில், “நான் படம் இயக்குவேன் என்று சத்தியமாக எதிர்பார்க்கவில்லை. நான் எழுதியது வேறு கதை. ஆனால், இப்போது இயக்கப் போவது வேறு கதை. அந்தக் கதையில் ஏழு தெரு நாய், ஒரு பூனை, ஒரு குதிரை சம்பந்தப்பட்ட விலங்குகளின் கதை. அந்த விலங்குகளை ப்ளூ கிராஸில் தத்தெடுத்து வெளிநாட்டு பயிற்சியாளரை வரவழைத்து பயிற்சி அளித்து படத்தை உருவாக்கப் போகிறோம். அந்தப் படம்தான் நான் அறிமுக இயக்குநராக இயக்கும் படமாக இருக்கும்.” என்றார் நடிகர் விஷால்.
Our Score