இன்று தனது பிறந்த நாளை கொண்டாடிய நடிகர் விஷால் சென்னை எழும்பூர், ICSA சென்டரில் விரைவில் நாடு திரும்பவிருக்கும் இலங்கை அகதிகளின் நற்பணி நாளாக கொண்டாடினார்.
இலங்கை அகதிகள் முகாமை சேர்ந்த மாணவர்களுக்கும், ICSA-வை சேர்ந்த முப்பது மாணவர்களுக்கும், உடலால் சவால் விடப்பட்ட மாணவர்களுக்கும், பார்வையற்றவர்களுக்கும் ஒரு லட்சத்தி அறுபத்தி ஏழாயிரம் ரூபாயை நன்கொடையாக கொடுத்தார். அது போக அவர்களுக்கு shoe மற்றும் socks-ஐ வழங்கினார். மேலும் socks வழங்க தன்னுடைய நற்பணி மன்றத்தினர் மூலமாக மக்களை அணுகி நிதி பெற்று மேலும் இதை சிறப்பாக செய்யவுள்ளதாக கூறினார்.
விழாவில் நடிகர் விஷால் பேசும்போது, “நான் ‘தாமிரபரணி’ படபிடிப்புக்காக இராமேஸ்வரத்தில் இருந்தபோதுதான் அங்கு இருக்கும் இலங்கை அகதிகள் முகம் பற்றி எனக்கு தெரிய வந்தது. எனக்கு முகாமை பற்றிய இன்னும் பல தகவல்களை என் அண்ணி ஸ்ரேயா அவர்களின் தோழியான பூங்கோதை சந்திரஹாசன் மூலமாக தெரிந்துகொண்டேன்.
மேலும், அவர் இயக்குனராக இருக்கும் ‘OFERR’ என்னும் NGO-வை பற்றிய என்னிடம் கூறியவுடன் எனக்கும் அவர்களுடன் சேர்ந்து நற்பனி செய்ய ஆர்வம் ஏற்ப்பட்டு தொடர்ந்து செய்து வருகிறேன். ஒவ்வொரு முறை நான் ‘OFERR’ அமைப்பிற்குச் சென்று திரும்பும்போது என்னுள் புத்துணர்ச்சி ஏற்ப்படுவதை நான் உணர்கிறேன்.
என்னுள் அரசியல் நோக்கம் இருப்பதால்நான் இதை போன்ற நற்பணிகளை செய்கிறேன் என்று நீங்கள் நினைக்க வேண்டாம். எனக்கு சத்தியமாக அதைபோன்ற அரசியல் நோக்கம் துளிகூட இல்லை. நான் ஒரு நடிகன், மக்களை மகிழ்விக்கும் மகத்தான பொறுப்பு எனக்கு உள்ளது. அதை மட்டும் சரியாக செய்தால் போதும் என்று நான் நினைகிறேன். மேலும் நான் நற்பணியாற்ற நினைப்பவர்களுக்கு சரியான வழியை காட்டவே விரும்புகிறேன்.
நடிகர் கார்த்தி நேற்று இரவு என்னிடம் பேசி கொண்டு இருக்கும்போது ‘அரசுப் பள்ளிகளில் கழிப்பறை இல்லாத காரணத்தினால் அங்கே படிக்கும் பெண் குழந்தைகளை அவர்களுடைய பெற்றோர் பள்ளிக்கு அனுப்ப மறுக்கிறார்கள். அதை கருத்தில் கொண்டு பாரீஸ் கார்னர் அருகில் உள்ள அரசுப் பள்ளி ஒன்றுக்கு எங்களுடைய அகரம் அறகட்டளை மூலமாக ஒரு இலட்சம் ருபாய் செலவில் கழிப்பறை கட்டிக் கொடுத்துள்ளேன்’ என்றார். அதைப் போலவே ஒரு லட்சம் ருபாய் கொடுத்தால், வேறு ஒரு பள்ளியில் கழிப்பறை கட்டி கொடுக்கலாம் என்றும் தெரிவித்தார். நானும் அதை நிச்சயம் செய்ய உள்ளேன். தனி ஒருவனாக இருந்து பணியாற்றுவதை விட பலர் பேர் கை கோர்த்து இந்த நல்ல விஷயத்தை செய்தால் சிறப்பாக அமையும்..” என்றார் விஷால்.









