full screen background image

ஜேம்ஸ்பாண்டுக்கும், ஷகிலாவுக்கும் என்னங்க சம்பந்தம்..?

ஜேம்ஸ்பாண்டுக்கும், ஷகிலாவுக்கும் என்னங்க சம்பந்தம்..?

நடிகர் விக்ரமும், நடிகை சமந்தாவும் ‘10 எண்றதுக்குள்ள’ என்ற படத்தில் ஜோடியாக நடித்துள்ளனர். விஜய் மில்டன் டைரக்டு செய்துள்ளார். ‘பாக்ஸ் ஸ்டார்’ பட நிறுவனத்துடன் இணைந்து ஏ.ஆர்.முருகதாஸ் தயாரித்துள்ளார்.

10 endrathukkulla movie press meet stills

இந்த படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சமீபத்தில் நடந்த்து. இந்த நிகழ்ச்சியில் தயாரிப்பாளர் ஏ.ஆர்.முருகதாஸ், இயக்குநர் விஜய் மில்டன், நடிகர் விக்ரம் ஆகியோரம் கலந்து கொண்டனர்.

முன்னதாக படத்தின் டிரெயிலரையும், பாடல் காட்சிகளின் முன்னோட்டத்தையும் திரையிட்டார்கள்.

படத்தின் ஒளிப்பதிவு அற்புதமாக இருந்தது. எல்லாரும்தான் டிஜிட்டலில் படமாக்குகிறார்கள். ஒரே கேமிராதான் பயன்படுத்தப்படுகிறது. ஆனால் விஜய் மில்டனுக்கு மட்டும் திரை எப்படி இப்படி சர்ப் போட்டு துவைத்து எடுத்தாற்போல் பளிச்சென்று இருக்கிறதென்று தெரியவில்லை. ஒளிப்பதிவுக்காகவே இந்தப் படத்தைப் பார்க்கலாம்..

DCIM (67)

இயக்குநர் விஜய் மில்டன் பேசும்போது, “என்னோட கோலிசோடா படத்தைப் பார்த்து\ட்டு மிட் நைட்ல விக்ரம் ஸார் என்னை போன்ல கூப்பிட்டு பேசினார். படம் நல்லாயிருக்குன்னு சொல்லி பாராட்டினார். அப்படி பேசும்போது வேற ஏதாவது கதைகள் இருக்கான்னு கேட்டார். நானும் நாலைஞ்சு கதை சொன்னேன். அதுல ஒண்ணுதான் இந்தக் கதை.

உடனேயே நேரா வாங்களேன். பேசுவோம் என்றார். இப்போ மிட்நைட் ஸார். இப்போ வர முடியாது. காலைல வர்றேன்னு சொல்லிட்டு காலைல போய் முழு கதையையும் சொன்னேன். அதுக்கப்புறம் 4 முறை சந்தித்த உடனேயே இந்த பிராஜெக்ட் பைனலாயிருச்சு.

இதுக்கு முன்னாடியே முருகதாஸ் ஸார்கிட்ட இந்தக் கதையை முழுசா சொல்லியிருந்தேன். அவரும் நேரம் வரும்போது பண்ணுவோம்னு சொல்லியிருந்தார். அதுனால விக்ரம் ஸாரும் ஓகேன்னு சொன்னதால பட்டுன்னு இதை ஆரம்பிச்சோம்.

இதுவொரு டிராவலிங் படம். காதல் படம்தான். சென்னையில் இருந்து உத்தரகாண்ட்வரைக்கும் விக்ரமும், சமந்தாவும் டிராவல் பண்றஆங்க. அப்போ அவங்களுக்கு ஏற்படும் அனுபவங்கள்தான் படமே. உத்தர்காண்ட் காட்சிகள் சிலவற்றை நேபாளத்தில் படமாக்கினோம்.

விக்ரம் ஸார் ரொம்ப டெடிகேட்டர் பெர்ஸன். செட்டுக்குள்ள வந்துட்டா அவரோட கவனம் முழுக்க நடிப்பு மேலதான் இருக்கும். இதுல அவரால எனக்கு எந்தப் பிரச்சினையம் வரலை. நான் நினைச்சதுக்கும், எதிர்பார்த்த்துக்கும் மேலேயே நடிச்சுக் கொடுத்திருக்கார். அதுக்காக அவருக்கு நான் ரொம்ப நன்றி தெரிவிச்சுகுறேன்..” என்றார்.

actor vikram

நடிகர் விக்ரம் பேசும்போது, “10 எண்றதுக்குள்ள’ படம் காதல் கதை. திகிலும் இருக்கும். நான் கார் டிரைவராக வருகிறேன். இதை படமாக்கும்போதே நல்ல கதை என்ற உணர்வு ஏற்பட்டது. நானும் சமந்தாவும் தொடர்பே இல்லாதவர்களாக வருவோம். ஒன்றாக பயணிப்போம். காதலை சொல்லமாட்டோம். ஆனாலும் கதையோடு அதுவும் வரும்.

டைரக்டர் விஜய் மில்டன் கதாபாத்திரத்துக்கு ஏற்ப என்னை மாற்றினார். திறமையான தொழில் நுட்பக் கலைஞர்கள் இதில் பணியாற்றியுள்ளனர். கதை, கதாபாத்திரங்கள் எல்லாமே புதுசாக இருக்கும். 

சமந்தா கதாபாத்திரம் எளிதானது கிடையாது. யாராலும் நடித்துவிடவும் முடியாது. ஆனாலும் அந்த கதாபாத்திரத்தில் அவர் சிறப்பாக நடித்தார். சமந்தா எனக்கு பிடித்த நடிகை. சிறந்த புத்திசாலி. எல்லா விஷயங்களையும் தெரிந்து வைத்து இருக்கிறார். எல்லோரும் கஷ்டப்பட்டு நடித்துள்ளோம்.

எனது முந்தைய ‘தில்’, ‘தூள்’ படங்கள் காதல் படங்களாக இருந்தாலும் அதோடு சில சமூக விஷயங்களும் இருந்தது. அது மாதிரி ‘10 எண்றதுக்குள்ள’ படத்தின் கதையும் இருக்கும்.

ஏ.ஆர்.முருகதாஸ் என்னிடம் 3 கதைகள் சொல்லி இருக்கிறார். வாய்ப்பு அமையும்போது அவர் படத்தில் நடிப்பேன். டைரக்டர் பாலா எப்போது அழைத்தாலும் அவர் படத்தில் நடிப்பேன்.

எல்லா நடிகர்களுக்குள்ளும் ஒரு டைரக்டர் உண்டு. நடிகர்களால் சும்மா நடித்து விட்டுப்போக முடியாது. கதை, நடிப்பு, சண்டைக்காட்சி ஒவ்வொன்றிலும் அக்கறை எடுத்து பொருத்தமாக வந்துள்ளதா என்று பார்ப்போம். டைரக்டர்களிடம் சில திருத்தங்களையும் சொல்வோம். ஆனாலும் திருத்தங்களை ஏற்பதும் ஏற்காததும் டைரக்டர் முடிவு. நான் டைரக்டர் ஆவேனா என்பதை 5 வருடங்களுக்கு பிறகுதான் சொல்ல முடியும்.” என்றார் விக்ரம். 

இந்தப் படத்தில் விக்ரமின் கேரக்டர் பெயர் ஜேம்ஸ்பாண்ட். ஹீரோயின் சமந்தாவின் பெயர் ஷகிலா. கேள்வி-பதில் சீஸனில் இந்தப் பெயர் தொடர்பு பற்றி விக்ரமிடம் கேட்டபோது, “எந்த ஷகிலாவை கேக்குறீங்க..? ஓ.. முன்னாடி படத்துல நடிச்சிட்டிருந்தாங்களே அவங்களையா..? அவங்களை இல்லீங்க. ஜேம்ஸ்பாண்டுக்கும், ஷகிலாவுக்கும் என்னங்க சம்பந்தம் இருக்க முடியும்..? இது வேற..” என்றார்.

முந்தைய பிரஸ்மீட்டில் சமந்தாவை நீங்க அடிச்சதா அவங்க புகார் சொன்னாங்களே என்று விக்ரமிடம் கேட்டதற்கு “ஐயையோ.. அது ச்சும்மா ஒரு ப்ப்ளிசிட்டிக்காக ப்ரெண்ட்லியா பேசினது.. அப்பவே உங்களுக்கு தெரியாதா..? தோணலியா..?” என்று திருப்பிக் கேட்டு அனைவரையும் திகைக்க வைத்தார்.

அடப்பாவி பிரஸ்காரங்களா.. அந்த டுபாக்கூர் நியூஸைத்தான் நாலு காலம் சைஸுக்கு போஸ்டர் அடிச்சு ஒட்டினீங்களாக்கும்..?

Our Score