‘அஞ்சல’ படத்தின் ஆடியோவை நடிகர் விஜய் வெளியிட்டார்

‘அஞ்சல’ படத்தின் ஆடியோவை நடிகர் விஜய் வெளியிட்டார்

பிரபல சண்டை பயிற்சியாளர் திலிப் சுப்புராயன் மகிழ்சியின் உச்சத்தில் இருக்கிறார்.

அவரது தயாரிப்பில் உருவாகி, அடுத்த மாதம் திரைக்கு  வெளிவர தயாராக உள்ள ‘அஞ்சல’ படத்தின்  ஆடியோ சி.டி.யை இளைய தளபதி விஜய் வெளியிட்டு  இருப்பதே அவரது மகிழ்ச்சிக்கு காரணம்.

Vijay sir 

"இடைவிடாமல்  படப்பிடிப்பு  நடந்து  கொண்டிருந்ததால் அவரிடம்  சி.டி.யை வெளியிட  முடியுமா என்று கேட்பதற்கு சற்று தயங்கினேன். இருப்பினும் ஒரு நல்ல சந்தர்பத்தில் அவரிடம் இந்தக் கோரிக்கையை வைத்தேன். சற்றும் தயங்காமல் ‘உடனே வாங்க..’ என்று சொல்லி படத்தின் ஆடியோ சி.டி.யை வெளியிட்டு எங்களைப் பெருமைப்படுத்தினார் இளைய தளபதி விஜய்.

இந்தப் படத்தின் மூலம்  எனக்கு கிடைத்த அங்கீகாரங்கள் ஏராளம். அதில் முக்கியமானதாக இளைய தளபதி விஜய், அன்று என்னை உற்சாகப்படுத்தும்விதத்தில் கூறிய  வார்த்தைகள்தான். இந்த வார்த்தைகள் தமிழ்த் திரையுலகில் நான் தயாரிப்பாளராக நீடிக்கவும், வெற்றி  பெறவும் மிக முக்கிய காரணங்களாக இருக்கும்..” என்று நம்பிக்கையுடன் கூறினார் தயாரிப்பாளர் திலிப் சுப்புராயன்.