full screen background image

விஜய்யின் 65-வது படம் இன்று துவங்கியது..!

விஜய்யின் 65-வது படம் இன்று துவங்கியது..!

நடிகர் விஜய் நடிக்கும் 65-வது படத்தின் பூஜை இன்று காலை நடைபெற்றது.

‘மாஸ்டர்’ படத்தின் பெரும் வெற்றியைத் தொடர்ந்து நடிகர் விஜய் நடிக்கும் 65-வது திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க முன் வந்தது. இந்தப் படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்குகிறார்.

இந்தப் படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். மேலும் யோகிபாபு, ஷாஜி, VTV கணேஷ் மற்றும் பலர் நடிக்கின்றனர்.

இந்தப் படத்தின் பூஜை நிகழ்வு இன்று காலை சென்னையில் சன் டிவி அலுவலகத்தில் நடைபெற்றுள்ளது.

இந்த நிகழ்வில் நடிகர் விஜய், நடிகர்கள் ஷாஜி, விடிவி கணேஷ் மற்றும் ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சா, சண்டை இயக்குநர் அன்பறிவு, நடன இயக்குநர் ஜானி, இயக்குநர் நெல்சன் மற்றும் தொழில் நுட்பக் கலைஞர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

படத்தின் நாயகியான பூஜா ஹெக்டேவுக்கு இன்று வேறொரு படத்தின் படப்பிடிப்பு இருந்ததால் இந்தப் பூஜையில் கலந்து கொள்ள முடியவில்லையாம். அதனால் தனது டிவீட்டர் பக்கத்தில் படக் குழுவினருக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளார் பூஜா ஹெக்டே.

இந்தப் படத்தின் முதல் கட்டப் படப்பிடிப்பு மே மாதம் துவங்குகிறது. நடனப் பயிற்சி அடுத்த மாதம் துவங்கவுள்ளது.

Our Score