வில்லனாகூட நடிக்கத் தயார் – நடிகர் உதயாவின் திடீர் மனமாற்றம்..!

வில்லனாகூட நடிக்கத் தயார் – நடிகர் உதயாவின் திடீர் மனமாற்றம்..!

கோடம்பாக்கத்தில் ஹீரோவாக வாய்ப்பு கிடைப்பதே அரிது. பல புதுமுகங்கள் படாதபாடுபட்டு அறிமுகமாகனாலும் அவர்களில் திற்மைமிக்கவர்களே தொடர்ந்து கொண்டிருக்கிறார்கள். மற்றவர்கள் காணவில்லை என்ற அறிவிப்பில்தான் இருக்கிறார்கள்.

கோடம்பாக்கத்தில் விசிட்டிங் கார்டுடன் நுழைந்தவர்களிலும் ஒரு சிலர் மட்டும்தான் இப்போதுவரையிலும் நீடித்து வருகிறார்கள். சிலருக்கு திரையுலகம் ஒளியைக் கொடுக்கிறது. பலருக்குக் கொடுப்பதில்லை.  இதுவரையிலும் 10 படங்களில் ஹீரோவாக நடித்திருக்கும் நடிகர் உதயா தனக்கு ஒரு பிரேக் கொடுக்கும் படத்தை இன்னமும் தேடிக் கொண்டிருக்கிறார்.

ஏப்ரல் 22, இன்றைக்கு பிறந்த நாள் காணும் நடிகர் உதயாவுக்கு தனி அறிமுகம் தேவையில்லை. இவரது தந்தை தயாரிப்பாளர் ஏ.எல்.அழகப்பன். இவரது தம்பி இயக்குநர் விஜய். இத்தனை செல்வாக்கு இருந்தும் தனித்த அடையாளமே தானே நன்று ஜெயிக்க வேண்டும் என்று நினைத்து இன்னமும் போராடிக் கொண்டிருக்கிறார்.

‘திருநெல்வேலி’ என்ற படத்தில் ஹீரோவாக நடிக்கத் துவங்கி, ‘கலகலப்பு’, ‘ஷக்கலக்க பேபி’, ‘கணபதி வந்தாச்சு’, ‘உன்னை கண் தேடுதே’, ‘பூவா தலையா’, ‘ரா ரா’ ஆகிய படங்களில் ஹீரோவாகவே ஆக்ட் செய்துவிட்டார். அடுத்து தலைவா படத்தில் ஒரு கெஸ்ட் ரோலில் வந்து தலையைக் காட்டினார்.

இ்ப்போது ‘ஆவி குமார்’ என்கிற படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறாராம். இது ஆவிகள் பற்றிய படமாம். ஆவி அமுதா போன்று ஆவிகளுடன் பேசி அவர்களை வரவழைத்துக் காண்பிக்கும் வித்தை தெரிந்தவனின் வாழ்க்கைக் கதையாம்..

அடுத்து இவரே ஒரு படத்திற்கு கதை எழுதி இயக்கப் போகும் அளவுக்கு மிகத் தெளிவாக இருக்கிறார். “முழுக்க முழுக்க ஹீரோவாகவே மட்டுமே நடிப்பேன்னு சொல்லலை.. சப்போர்ட்டிங் ஆக்டர்ஸ்… ஏன் வில்லனாகூட நடிக்கத் தயார்..” என்கிறார் உதயா.

இதோ இதை கோடம்பாக்கத்துல நாங்களும் ஓதியாச்சு..!

Our Score