‘மெகா ஸ்டார்’ மம்மூட்டியின் ரசிகராக மலையாளம் பேசி நடிக்கவிருக்கும் நடிகர் சூரி…!

‘மெகா ஸ்டார்’ மம்மூட்டியின் ரசிகராக மலையாளம் பேசி நடிக்கவிருக்கும் நடிகர் சூரி…!

தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராக கலக்கிய சூரி, அடுத்தடுத்த படங்களில் வெவ்வேறு அவதாரங்களில், ரசிகர்களை மட்டுமின்றி அனைவரையும் ஆச்சர்யப்படுத்தி வருகிறார். அந்த வரிசையில், தற்போது தமிழின் அதிமுக்கிய இயக்குநரான வெற்றிமாறன் இயக்கி வரும் படத்தில் நாயகனாக நடிக்கிறார் சூரி.

இந்நிலையில் தற்போது பிக்பாஸ் முகேன் நடிக்கும் வேலன்’ படத்தில் மலையாளி அவதாரத்தில் அசத்தவுள்ளார் சூரி.

Sky Films International சார்பில் தயாரிப்பாளர் கலைமகன் முபாரக் இப்படத்தினை தயாரிக்கிறார்.

இந்தப் படத்தில் இளைய திலகம் பிரபு, தம்பி ராமையா, சூரி, ஹரீஷ் பேரடி, ஶ்ரீரஞ்சனி, சுஜாதா ஆகியோரும் நடிக்கிறார்கள்.

இசையமைப்பாளர் கோபி சுந்தர் இசையமைக்கிறார். கோபி ஜகதீஷ்வரன் ஒளிப்பதிவு செய்கிறார். முன்னணி இயக்குநரான சிறுத்தை சிவாவின் உதவியாளர் கவின் இப்படத்தினை இயக்குகிறார்.

தனது கதாப்பாத்திரத்திற்காக  சரளமாக மலையாளம் பேச வேண்டியிருப்பதால்.. தற்போது கிடைக்கும் ஓய்வு நேரத்தில் எல்லாம்  மலையாள மொழியைக் கற்று வருகிறார் சூரி. இப்படத்தில் நடிகர் மம்முட்டியின் தீவிர ரசிகராக ‘மம்முக்கா’ எனும் கதாப்பாத்திரத்தில் நடிக்கிறாராம் சூரி.

வாழ்த்துகள்..!

 
Our Score