தனுஷை தொடர்ந்து சிவகார்த்திகேயனும் தெலுங்கு படத்தில் நடிக்கிறார்

தனுஷை தொடர்ந்து சிவகார்த்திகேயனும் தெலுங்கு படத்தில் நடிக்கிறார்

தன்னுடைய போட்டியாளராக நினைக்கும் தனுஷை போலவே, தானும் தெலுங்கு திரையுலகத்தில் நுழைய முடிவெடுத்துவிட்டாராம் சிவகார்த்திகேயன்.

நடிகர் சிவகார்த்திகேயனை தனுஷ்தான் தனது படங்களில் அறிமுகப்படுத்தி வைத்து வெற்றி பெற வைத்தார். ஆனாலும் காலப்போக்கில் இருவருக்குமிடையே ஏற்பட்ட கடும் மோதலினால் இவருக்குமிடையே சுமூகமான நிலைமை தற்போதில்லை.

இந்த நேரத்தில் நடிகர் தனுஷ் தற்போது இரண்டு நேரடி தெலுங்கு படங்களில் நடிக்கவிருக்கிறார். இதற்கான முறையான அறிவிப்பு வெளிவந்தவிட்டது.

இந்த நேரத்தில் நடிகர் சிவகார்த்திகேயனும் தெலுங்கில் நடிக்கப் போவதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

அதுவும் தனுஷ் நடிக்கவிருக்கும் தெலுங்கு படத்தைத் தயாரிக்கும் ஸ்ரீவெங்கடேஸ்வரா க்ரியேஷன்ஸ் நிறுவனமே சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்தையும் தயாரிக்கப் போகிறதாம்.

இந்தப் படத்தை தெலுங்கில் சமீபத்தில் வெளியாகி ஹிட்டடித்த ‘ஜாதி ரத்னாலு’ என்ற படத்தை இயக்கிய இயக்குநர் அனுதீப் இயக்கப் போகிறாராம். இப்படி தமிழ் நடிகர்கள் நேரடி தெலுங்கு படங்களில் நடிக்கப் போனால் தமிழ்த் திரையுலகத்தில் அவர்களது மார்க்கெட் என்னாகும் என்று தெரியவில்லை.

Our Score