படம் வெளிவந்து 2 வருஷமாச்சு. ஆனாலும் சிம்புவுக்கு படங்கள் வந்து கொண்டேயிருப்பதன் மர்மம்தான் என்ன என்று தெரியவில்லை.
‘இரண்டாம் உலக’த்தின் தோல்வியினால் ஏற்பட்ட கடன் பிரச்சினையில் சிக்கித் தவித்த செல்வராகவனுக்கு அடுத்த வாய்ப்பை அவரது தம்பி தனுஷ்கூட கொடுக்கவில்லை. கிட்டத்தட்ட இரண்டாண்டுகள் காத்திருந்து இப்போதுதான் ஒரு வழியாக சிம்புவை ஹீரோவாக வைத்து புதிய படத்தை அறிவித்திருக்கிறார்.
அதற்குள்ளாக சிம்புவுக்கு அடுத்தப் படம் கிடைத்திருக்கிறதாம். உதயநிதி ஸ்டாலினின் மனைவியான கிருத்திகா ஸ்டாலின் இயக்கும் அடுத்தப் படத்தின் ஹீரோ சிம்புதானாம்.
கிருத்திகா உதயநிதி ஏற்கெனவே மிர்ச்சி சிவா, பிரியா ஆனந்த் நடிப்பில் ‘வணக்கம் சென்னை’ படத்தை இயக்கியிருக்கிறார். செல்வராகவனின் படத்தை முடித்த பின்பு சிம்பு இதில் நடிக்கவிருக்கிறாராம். ஹீரோயின் தேர்வு தற்போது நடைபெற்று வருகிறதாம். ஆனால் இசையமைப்பாளர் அனிருத்துதானாம்.
புதிய படங்களில் நடிப்பதெல்லாம் கெடக்கட்டும். இவர் நடிப்பில் தயாராகியிருக்கும் ‘வாலு’, ‘வேட்டை மன்னன்’ படங்களை முதலில் ரிலீஸ் செய்யச் சொல்லுங்கப்பா என்று அவரது ரசிகர்கள் அலுப்புடன் கேட்கிறார்கள்..!
இது சம்பந்தப்பட்டவர்களின் காதுகளுக்குக் கேட்கிறதா என்றுதான் தெரியவில்லை.









