“த்ரிஷா, ஹன்ஸிகா, பூனம் என்று 3 கவர்ச்சி பேய்களுடன் நடித்தேன்” – நடிகர் சித்தார்த்தின் அனுபவம்

“த்ரிஷா, ஹன்ஸிகா, பூனம் என்று 3 கவர்ச்சி பேய்களுடன் நடித்தேன்” – நடிகர் சித்தார்த்தின் அனுபவம்

வரும் வெள்ளியன்று திரைக்கு வரவிருக்கும் 'அரண்மனை-2' திரைப்படம் பற்றி இப்போதே பரபரப்பு துவங்கியிருக்கிறது.

இந்தப் படத்தில் நடித்தது பற்றி நடிகர் சித்தார்த்திடம் கேட்டபோது, "நான் பேய் படத்தில் நடிப்பது இதுதான் முதல் முறை.

இந்தப் படத்தில் மூன்று வகையான பேய்கள் இருக்கு.

சூரி, கோவை சரளா, மனோபாலா போன்ற காமெடி பேய்கள்..

ஹன்சிகா, த்ரிஷா, பூனம் பாஜ்வா என்கிற கவர்ச்சி பேய்கள்..

இசையமைப்பாளர், ஒளிப்பதிவாளர், ஆர்ட் டைரக்டர்னு டெக்னீஷியன் பேய்களும் இருக்காங்க.

‘ஆயுத எழுத்து’ படத்துக்கு பிறகு கிட்டத்தட்ட 12 வருட இடைவெளிக்கு பிறகு நானும் த்ரிஷாவும் சேர்ந்து நடிச்சிருக்கோம்.

அந்தப் படத்தில் தாய்லாந்து கடற்கரையில் இருவரும் ஒரு பாட்டு சீனில் நடித்திருப்போம். சொல்லி வச்சது மாதிரி இந்தப் படத்திலும் அதே கடற்கரையில் எங்க ரெண்டு பேருக்கும் ஒரு பாட்டு இருக்கு..

பேய்களையே பயமுறுத்துற மாதிரி படத்தை எடுத்திருக்கிறார் இயக்குநர் சுந்தர்.சி" என்கிறார் திகிலுடன்..!