full screen background image

எஸ்.பி.ஜனநாதனின் ‘புறம்போக்கு’ ஸ்டைலிஷான படம்..!

எஸ்.பி.ஜனநாதனின் ‘புறம்போக்கு’ ஸ்டைலிஷான படம்..!

பூரிப்பிலிருக்கிறார் ஷாம். இவர் நடித்த தெலுங்குப் படம் ‘ரேஸ் குர்ரம்’ ஆந்திராவில் பாக்ஸ் ஆபீஸில் பட்டையைக் கிளப்பிக் கொண்டிருக்கிறது. இதே நேரத்தில் ஆர்யா, விஜய் சேதுபதியுடன் இணைந்து எஸ்.பி.ஜனநாதனின் இயக்கத்தில் புறம்போக்கு படத்திலும் நடித்து வருகிறார்.

அந்தப் படம் பற்றி ஷாமின் பேட்டி இதோ :

எனக்கு தமிழ்த் திரையுலகில் புதிய பாதையை போட்டுக் கொடுத்த படம் ‘இயற்கை’. அதை இயக்கிய எஸ். பி. ஜனநாதன் என்கிற திறமைசாலியின் படம்தான் ‘புறம்போக்கு’. இதில் நாங்கள் மூன்று பேரும் இணைந்திருக்கிறோம். ”

“புறம்போக்கில் உங்கள் பாத்திரம் எப்படி?”

shaam

”புறம்போக்கில் என் பாத்திரத்தின் பெயர் மெக்காலே. பெயர் வரும்போதே ‘மெக்காலே; சட்டத்தின் ஆட்சி’ என்றுதான் வரும். அந்த அளவுக்கு சட்டத்தை மதிக்கும் போலீஸ் அதிகாரி. சட்டத்திலிருந்து யாரும் தப்பிக்க முடியாது என்று நம்புகிறவர். அதன்படி நடக்கிறவர். ஒரு வெளிநாட்டுப் பெண்தான் எனக்கு ஜோடி. போலீஸ் கனவில் மெக்காலே லண்டன் போய் படித்து வந்தவர். எல்லாம் சட்டப்படி நடக்க வேண்டும் என்று விரும்புகிற பிடிவாதம் உள்ளவர். எத்தனையோ போலீஸ் அதிகாரிகளைப் பார்த்திருப்போம். இது வழக்கம் போலில்லை. இதை புதிய பரிமாணத்தில் ஜனநாதன் உருவாக்கியிருக்கிறார். ஸ்டைலிஷாக இருக்கும்.

shaam-aarya

நான் சட்டத்தை மதிக்கிற பாத்திரம் என்றால் ஆர்யா சட்டத்தை மிதிக்கிறவர். விஜய் சேதுபதி இன்னொரு பக்கம். எங்கள் இரண்டு பேருடனும் அவர் தொடர்பில் இருப்பவர் .படத்தில் எங்கள் 3 பேரின் பாத்திரங்களும் 3 மாதிரியாக இருக்கும். ஒன்றுக்கொன்று பொருந்தாத தனியான குணம் கொண்டவை. இதில் என்ன வேடிக்கை என்றால் மூன்று பாத்திரங்களுமே தனித்தனி ஐடியாலஜி கொண்டவை. தான் நினைப்பதே சரி,செய்வதே சரி என்று இருப்பவர்கள்.”

உங்களில் யாருக்கு முக்கியத்துவம் இருக்கும்?

”மூவருக்கும் பேலன்ஸ் செய்துதான் காட்சிகள் வைத்திருக்கிறார்.”

ஆர்யா, விஜய்சேதுபதியுடன் நடித்த அனுபவம் பற்றி..?

DSC_0264

‘உள்ளம் கேட்குமே’ படம் முதல் ஆர்யா எனக்கு பழக்கம். ஆர்யா என் தம்பி மாதிரி, அவன் வீட்டில் இல்லை என்றாலும் அவன் அம்மாவிடம் உரிமையுடன் சாப்பிடும் அளவுக்கு குடும்ப நண்பன். ஆர்யாவின் வளர்ச்சி எனக்குப் பெருமையாக இருக்கிறது. பாலா படத்துக்கு காட்டிய 3 வருட உழைப்பு சாதாரணமல்ல. ‘மதராசபட்டினம்’ ‘பாஸ் என்கிற பாஸ்கரன்’ ‘ராஜாராணி’ என அவனது வளர்ச்சிகள், வெற்றிகள் சந்தோஷமாக இருக்கிறது.

DSC_0111

விஜய் சேதுபதியின் வளர்ச்சியும் பிரகாசமாக இருக்கிறது. அவரும் பல வருடம் போராடி இருக்கிறார். தனக்கென ஒரு இடத்தை ‘பீட்சா’ ‘சூதுகவ்வும்’ படங்கள் மூலம் பிடித்துள்ளார். எப்போதும் அவர் ஜாலி சந்தோஷ மூடில் இருப்பவர். இப்போது இனிய நண்பராகி விட்டார். எங்களுக்குள் எவ்வித ஈகோவும் கிடையாது. ஆரோக்கியமான நட்பு மட்டுமே இருக்கிறது. எங்களுக்குள் எவ்வித போட்டி பொறாமை.. எதுவுமே இல்லை. இயல்பாக சௌகரியமாகப் போய்க் கொண்டு இருக்கிறது.

DSC_0300

.’புறம்போக்கில்’ ஆர்யாவும் நானும் நடித்த காட்சிகள் பெங்களூரில் படமானது. ஏப்ரல் 16 முதல் விஜய் சேதுபதியுடன் சென்னையில் நடிக்கப் போகிறேன். ஜூன் மாதம் முதல் நாங்கள் மூன்று பேரும் 44 நாட்கள் இணைந்து நடிக்க இருக்கிறோம். புறம்போக்கு ஒரு பொலிடிக்கல் த்ரில்லராக இருக்கும்…” என்கிறார் ஷாம்.

Our Score