full screen background image

‘வாரிசு’ படத்தின் புதிய அப்டேட்டை வெளியிட்ட நடிகர்

‘வாரிசு’ படத்தின் புதிய அப்டேட்டை வெளியிட்ட நடிகர்

தெலுங்கு இயக்குநரான வம்சியின் இயக்கத்தில் உருவாகும் ‘வாரிசு’ படத்தில் நடித்து வருகிறார் விஜய். தெலுங்குலகின் மெகா இயக்குநரான ‘தில்’ ராஜு தயாரிக்கும் இப்படம், ஒரு எமோஷனல் குடும்பப் படமாக உருவாகி வருகிறது. இப்படத்தை தமிழகத்தில் ‘மாஸ்டர்’ படத் தயாரிப்பாளர் லலித்குமார் வெளியிடுகிறார்.

படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். இவர்களுடன் பிரகாஷ் ராஜ், பிரபு, சரத்குமார், கணேஷ் வெங்கட்ராமன், ஷாம், குஷ்பு, சங்கீதா, யோகி பாபு, சம்யுக்தா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். தமன் இசையமைக்கிறார்.

விரைவில் இப்படத்தின் முதல் சிங்கிள் டிராக் வெளியாகிறது. இப்படத்தின் பாடல் வெளியீட்டு விழாவை பிரம்மாண்டமாக நடத்துவதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.

இந்தப் படத்தில் விஜய்யின் நண்பராக, நடிகர் ஸ்ரீமன் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். தன் கதாப்பாத்திரத்திற்கான டப்பிங் பணிகளை முடித்துவிட்டதாக நடிகர் ஸ்ரீமன் இன்றைக்கு தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் செய்தி வெளியிட்டுள்ளார்.

அந்தச் செய்தியில். “பொங்கல் பண்டிகைக்கு வெளியாகும் படத்தின் டப்பிங் பணிகளை முடித்துவிட்டேன். அது என்ன படம் என்று உங்களுக்கு தெரியும். V என்றால் வெற்றி…” என்று குறிப்பிட்டுள்ளார் ஸ்ரீமன்.

Our Score