full screen background image

ரமீஸ் ராஜாவின் ‘டார்லிங் 2’ பயணம் 

ரமீஸ் ராஜாவின் ‘டார்லிங் 2’ பயணம் 

‘காக்க..! காக்க..! கனகவேல் காக்க…!’ என்று ஆரம்பிக்கும் ‘டார்லிங் 2’ படத்தின் டிரெய்லர், தற்போது சமூக வலைத்தளங்களில் ஒன்பது லட்சம் பார்வையாளர்களை கடந்துள்ளது.

தன் சிறு வயதிலிருந்தே நடிப்பின் மேல் காதல் கொண்ட அறிமுக நாயகன்  ரமீஸ் ராஜாவிற்கு ‘டார்லிங் 2’ ஒரு பொக்கிஷம் என்றுதான் சொல்ல வேண்டும்.

DSC_3627

இந்தப் படம் பற்றி பேசிய நடிகர் ரமீஸ் ராஜா, “பள்ளி நாட்களிலும், கல்லூரி நாட்களிலும் நடிப்பின் மேல் நான் மிகுந்த ஆர்வம் கொண்டவனாக இருந்தேன். அந்த ஆர்வமே, எனக்கு சில குறும் படங்களில் நடிக்கும் வாய்ப்பினை பெற்று தந்தது.

அந்தக் காலக்கட்டத்தில்தான், ஸ்டண்ட்  மாஸ்டர் பில்லா ஜகன் மூலமாக நான் இயக்குநர் சதீஷ் சந்திரசேகரன் அவர்களை சந்தித்தேன். சில சந்திப்புகளில் நாங்கள் இருவரும் ‘டார்லிங் 2’ கதைக்குள் ஆழமாக இணைந்துவிட்டோம். அதனை தொடர்ந்து, நடிப்பின் நுணுக்கத்தை நன்கு அறிய சில மாதங்கள் பயிற்சியும் மேற்கொண்டேன்.

பொதுவாக புதுமுக நடிகர்களுக்கு, சினிமா துறையில் பெரிய அளவிற்கு ஒத்துழைப்பு இருக்காது என்கிற பேச்சு இருக்கும் நிலையில், என்னுடன் பணியாற்றிய அனைவரும் எனக்கு சிறந்த தூண்களாக அமைந்திருந்தனர்.

மேலும், படத்தின் தயாரிப்பாளர் K.E. ஞானவேல் ராஜா அவர்கள், வளர்ந்து வரும் இளம் திறமையாளர்களுக்கு அமைந்த ஓர் வரப்பிரசாதம். படத்தின் வெளியீட்டு நாளான ஏப்ரல் 1-ம் தேதி, எங்களுக்கு ஓர் மிகப் பெரிய நாளாக அமையும் என்று நம்புகிறேன். இப்படத்தில் அனைத்து  கதை அம்சங்களும் நிறைந்துள்ளது என்று நான் சொல்வதைவிட, மக்கள் சொல்வதைத்தான் நான் ஆவலோடு எதிர்பார்த்து காத்திருக்கிறேன்…” என்கிறார் இளம் நாயகன் ரமீஸ் ராஜா.

Our Score