ஜனவரி மாதத்தில் கட்சி துவக்கம் – நடிகர் ரஜினிகாந்த் அதிரடி அறிவி்ப்பு..!

ஜனவரி மாதத்தில் கட்சி துவக்கம் – நடிகர் ரஜினிகாந்த் அதிரடி அறிவி்ப்பு..!

நடிகர் ரஜினிகாந்த் கடைசியாக தனது அரசியல் பிரவேசத்தை உறுதிபடச் சொல்லிவிட்டார்.

வரும் ஜனவரி மாதத்தில் கட்சியைத் துவக்கப் போகிறாராம்.

எந்தத் தேதியில் துவக்கப் போகிறோம் என்பதை டிசம்பர் 31-ம் தேதி அறிவிக்கிறாராம்.

இது குறித்து சற்று நேரத்திற்கு முன்பு தனது டிவிட்டர் பக்கத்தில் அதிரடியாய் அறிவித்திருக்கிறார் ரஜினிகாந்த்.

அந்த டிவிட்டர் செய்தியில்,

“ஜனவரியில் கட்சித் துவக்கம்.

டிசம்பர் 31-ல் தேதி அறிவிப்பு.

மாத்துவோம் மாத்துவோம்..! எல்லாத்தையும் மாத்துவோம்!!

இப்போ இல்லேன்னா எப்பவும் இல்லே!!!

வரப் போகின்ற சட்டமன்றத் தேர்தலில் மக்களுடைய பேராதரவுடன் வெற்றி பெற்று, தமிழகத்தில் நேர்மையான, நாணயமான, வெளிப்படையான, ஊழலற்ற, ஜாதி சார்பற்ற, ஆன்மீக அரசியல் உருவாகுவது நிச்சயம்.

அற்புதம்.. அதிசயம்.. நிகழும்..!”

என்று குறிப்பிட்டிருக்கிறார் ரஜினிகாந்த்.

இதைக் கேள்விப்பட்டு ரஜினி ரசிகர்கள் மிகப் பெரிய சந்தோஷத்தில் இருக்கிறார்கள். இத்தனையாண்டுகளாக தாங்கள் எதிர்பார்த்திருந்த ஒரு நிகழ்வு நடந்தேறப் போகிறது என்கிற உற்சாகம் அவர்களிடத்தில் கரைபுரண்டோடுகிறது..!

Our Score