தியேட்டர்கள் திறந்திருக்கிறதா.. கூட்டம் வருகிறதா.. வசூல் ஆகிறதா.. என்பது பற்றியெல்லாம் கவலையில்லாமல் பல தயாரிப்பாளர்கள் தாங்கள் நிறுத்தி வைத்திருந்த படங்களின் படப்பிடிப்புகளை நடத்தி முடித்துவிட்டார்கள்.
இதில் சிம்பு நடித்த ‘ஈஸ்வரன்’, கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கிய ‘ஜோஷ்வா’, சுசீந்திரன் இயக்கிய ‘சிவ சிவா’, ஜான்ஸன் இயக்கத்தில் சந்தானம் நடித்திருக்கும் ‘பாரீஸ் ஜெயராஜ்’, யோகிபாபு நடித்த ‘கெட்டவன்னு பேர் எடுத்த நல்லவன்டா’, டி.சிவாவின் ‘அக்னி சிறகுகள்’, ஜெய் நடித்திருக்கும் ‘பிரேக்கிங் நியூஸ்’ ஆகிய திரைப்படங்களின் படப்பிடிப்புகள் முடிந்துவிட்டன.
இதில் நடிகர் சந்தானம் அனைவருக்கும் முன்னோடியாக தான் நடித்து முடித்த ‘பாரீஸ் ஜெயராஜ்’ படத்தில் தனது சம்பளத்தில் இருந்து 50 சதவிகிதத்தைக் குறைத்துக் கொண்டாராம். இதனால், அந்தப் படத்தின் தயாரிப்பாளர் மிகுந்த மகிழ்ச்சியுடன் இருக்கிறார்.
இதேபோல் மற்றைய நடிகர்களும் மனமுவந்து முன் வந்து சம்பளத்தைக் குறைத்துக் கொண்டால் தமிழ்ச் சினிமாவுலகம் கொஞ்சம் பிழைத்துக் கொள்ளும்..!