full screen background image

ஒரே நேரத்தில் 8 படங்களைத் தயாரிக்கும் ‘தைரிய’ தயாரிப்பாளர்

ஒரே நேரத்தில் 8 படங்களைத் தயாரிக்கும் ‘தைரிய’ தயாரிப்பாளர்

தமிழ் திரையுலகின் முன்னணி பைனான்சியரும், வேதாளம்’, ‘அரண்மனை-1’ மற்றும் ‘2’, ‘மாயா’, ‘பாகுபலி–1’, ‘சென்னை–28 2ம் பாகம்’, ‘இது நம்ம ஆளு’, ‘காஞ்சனா’, ‘சிவலிங்கா(தெலுங்கு)’, ‘ஹலோ நான் பேய் பேசுறேன்’ உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட படங்களை அபிஷேக் பிலிம்ஸ் சார்பாக விநியோகம் செய்தவருமான ரமேஷ் பி.பிள்ளை, தனது தயாரிப்பு நிறுவனம் அபிஷேக் பிலிம்ஸ் சார்பாக 8 புதிய படங்களை தயாரிக்கிறார்.

இவர் தற்போது எழில் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடிக்க ‘ஆயிரம் ஜென்மங்கள்’ மற்றும் ‘திரிஷ்யம்’ பட வெற்றி கூட்டணியான மோகன்லால் – ஜீத்து ஜோஸப் மற்றும் திரிஷா நாயகியாக நடிக்க மும்மொழிகளில் உருவாகும் ‘ராம்’ படத்தையும் மிக பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரித்து வருகிறார். இந்த நேரத்தில் தற்போது புதிதாக 8 படங்களைத் தயாரிக்கிறார்.

இந்தப் படங்களில் பிரபுதேவா, சத்யராஜ், நயன்தாரா, காஜல் அகர்வால், ரம்யாகிருஷ்ணன், லட்சுமி ராய், அனுசுயா ஆகியோர் நடிக்கிறா்கள். டான்சேண்டி – ராகவன் – ராஜா சரவணன் – கல்யாண் – விபின் ஆகிய இயக்குநர்கள் இந்தப் படங்களை இயக்குகிறார்கள்.

இதில் பிரபுதேவாவின் நடிப்பில் 3 படங்கள், நயன்தாராவின் நடிப்பில் 2 படங்கள், காஜல் அகர்வால் நடிப்பில் 1 படமும் தயாராகிறது.

ரெஜினா கேஸண்ட்ரா நடிப்பில் டான் சேண்டி இயக்கும் படம்

மகாபலிபுரம்’, ‘கொரில்லா’ ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் டான்சேண்டியின் கதை – திரைக்கதை – வசனம் – இயக்கத்தில் ‘பிளாஷ்பேக்’ எனும் புதிய படம் உருவாகிறது.

இந்தப் படத்தில் ரெஜினா கேஸண்ட்ரா, இளவரசு, அனுசுயா, உமா ரியாஸ், ஆர்யன், 96’ பட புகழ் சூர்யா, ‘மெர்சல்’ பட புகழ் அக்ஷன்த் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.

ஒளிப்பதிவு – S.யுவா, இசை – சாம் C.S., கலை இயக்கம் – S.S.மூர்த்தி, பாடல்கள் : யுகபாரதி, படத் தொகுப்பு – சான் லோகேஷ், நிர்வாகத் தயாரிப்பு – ஷங்கர் சத்தியமூர்த்தி, மக்கள் தொடர்பு – நிகில் முருகன், தயாரிப்பு – ரமேஷ் பி.பிள்ளை, கதை – திரைக்கதை – வசனம் – இயக்கம் – டான்சேண்டி.

அழகிய காதல் கதையினை, முற்றிலும் அழகான பின்னணியில் அனைவரும் ரசிக்கும் வகையில், உணர்வுகளின் உயிர்ப்போடு வெளிப்படுத்தும். பிரமாண்டமான பொருட்செலவில் படைக்கப்படும் இப்படம் பார்ப்பவர்கள் அனைவரும் தாங்கள் சந்தித்த, பாதித்த, கடந்து வந்த உணர்வுகளை திரும்பிப் பார்க்கும் வகையில் திரைக்கதை வடிவமைக்கப்பட்டுள்ளது.

சென்னையில் துவங்கிய இப்படத்தின் படப்பிடிப்பு கொடைக்கானலில் முக்கியமான பகுதிகள் படமாக்கப் பட்டுள்ளது.

பிரபுதேவா, ‘மஞ்ச பை’ ராகவன் இணையும் புதிய படம் ‘மை டியர் பூதம்’

இயக்குநர் சற்குணத்திடம் பல படங்களில் இணை–துணை இயக்குநராக பணியாற்றி ‘மஞ்சப் பை’ படம் மூலம் இயக்குநராக முத்திரை பதித்த ராகவன், கடம்பன்’ படம் மூலம் தனி அடையாளம் கண்டார்.

காதல் – கமர்ஷியல் – ஹாரர் – திரில்லர் என தொடர் வரிசை படங்களிலிருந்து மாறுபட்டு முற்றிலும் குழந்தைகள் மற்றும் குடும்பங்கள் இணைந்து மகிழும்படியான கதை – திரைக்கதையமைப்பில் பேண்டஸி படமாக பிரபுதேவா கதாநாயகனாக நடிக்கும் புதிய படம் ஒன்றை இயக்குகிறார் ராகவன்.

இந்தப் படத்தில் பிரபுதேவா நாயகனாக நடிக்கிறார். கதாநாயகி மற்றும் தொழில் நுட்ப கலைஞர்கள் தேர்வு நடைபெற்று வருகிறது.

இந்தப் படத்தில் இதுவரையிலும் ஏற்றிடாத அற்புதமான, அபிமான வேடத்தில் பிரபுதேவா நடிக்கிறார். ‘அன்புள்ள ரஜினிகாந்த்’ படத்திற்கு பின் எப்படி ‘ரஜினி அங்கிள்’ என்று அவரை கொண்டாடினார்களோ, அதைப்போல் இப்படத்திற்கு பின் அனைத்து குழந்தைகளும் PD (பிரபுதேவா) அங்கிள் என கொண்டாடும்விதமாக கதை அமைக்கப்பட்டிருக்கிறது.

மிகுந்த பொருட்செலவில் பேண்டஸி திரைப்படமாக உருவாகும் இப்படத்திற்காக அமெரிக்கா மற்றும் லண்டனிலுள்ள VFX நிறுவனத்துடன் இணைந்து பணியாற்ற உள்ளனர்.

கல்யாண் குமார் இயக்கத்தில் பிரபுதேவா

கதை சொல்ல போறோம்’, ‘காத்தாடி’, ‘குலேபகாவலி’, ‘ஜாக்பாட்’, ‘கோஷ்டி’, ‘ஷூ’ திரைப்படங்களை தொடர்ந்து இயக்குநர் கல்யாண் குமார் ஒரு புதிய படத்தை இயக்கவுள்ளார்.

இந்தப் படத்தில் பிரபுதேவா உடன் கே.எஸ்.ரவிக்குமார், யோகிபாபு, தங்கதுரை, டோனி, மன்சூர் அலிகான், தேவதர்ஷினி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.

இது ஒரு ஹாரர் கலந்த காமெடி குடும்ப படமாக உருவாகவிருக்கிறது. ஜேக்கப் ரத்தன் ராஜ் இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார், அஸ்வின் இசையமைக்கிறார், விஜய் வேலுக்குட்டி எடிட்டிங் செய்கிறார், கலை அமைப்பபை மோகன் மேற்கொள்கிறார். விரைவில் படப்பிடிப்பு துவங்க உள்ளது.

நயன்தாரா நடிக்கும் இரண்டு புதிய படங்கள்

நயன்தாரா நடிக்கும் முதல் படத்தை, இயக்குநர் ஷாஜி கைலாசிடம் ‘ஆகஸ்ட் 15’, ‘துரோனா’, ‘ரெட் சில்லிஸ்’ போன்ற படங்களிலும், இயக்குநர் மது சுதாகரனின் ‘சேண்ட்விச்’ மற்றும் ‘10:30 am லோக்கல் கால்’ படங்களிலும் துணை, இணை இயக்குநராக பணியாற்றிய விபின் முதன் முறையாக கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்குநராக தமிழில் அறிமுகாகிறார்.

இந்தப் படத்திற்கு சாம் சி எஸ் இசையமைக்கிறார். இது ஒரு சைக்காலாஜிக்கல் மிஸ்டிரி த்ரில்லர் படமாக இருக்கும்.

நயன்தாராவின் இரண்டாம் படத்திற்கான குழு மற்றும் இதர விரைவில் அறிவிக்கப்படும்.

காஜல் அகர்வால், சத்யராஜ், ரம்யா கிருஷ்ணன், லக்ஷ்மி ராய் நடிப்பில் – ராஜா சரவணன் இயக்கத்தில் உருவாகிறது ‘ரவுடி பேபி’ திரைப்படம்.

ஒளிப்பதிவு – செல்லதுரை, இசை – சாம் C.S., கலை இயக்கம் –  ரெமியோன், பாடல்கள் – ‘கவிப்பேரரசு’ வைரமுத்து, படத் தொகுப்பு – தீபக் துவாரகநாத், சண்டை இயக்கம் –  ‘சுப்ரீம்’ சுந்தர், தயாரிப்பு நிர்வாகம் – ஆனந்த் – சசிகுமார், நிர்வாக தயாரிப்பு – S.ஷங்கர் சத்தியமூர்த்தி – கிட்டு, மக்கள் தொடர்பு – நிகில் முருகன், தயாரிப்பு — அபிஷேக் பிலிம்ஸ் ரமேஷ் பி.பிள்ளை.

பல முன்னணி இயக்குநர்களுடன் உதவி, இணை இயக்குநராக பணியாற்றியவரும், கதை–வசனம், VFX, எடிட்டிங், மார்கெடிங் என பல்வேறு துறைகளில் பயிற்சி பெற்று பணியாற்றிவருமான ராஜா சரவணன் ‘ரவுடிபேபி’ படம் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார்.

எல்லா குழந்தைகளும் ஏஞ்சல் அல்ல என்ற வரிகளுடன் வெளியிட்ட ஃபர்ஸ்ட் லுக் பரபரப்பாக பேசப்பட்டது. சுவாரஸ்யமான காட்சிகள், எதிர்பாராத திருப்பங்கள், பயம் கலந்த, கவனம் பிசகாத, அதிர்ச்சியான காட்சியமைப்புகளுடன் கூடிய திரைக்கதை அமைக்கப்பட்டிருக்கிறது. மற்ற நடிகர் – நடிகைகள் குறித்த அறிவிப்பு விரைவில் அறிவிக்கப்படுப்படுமாம்.

 
Our Score