full screen background image

தென்னிந்திய நடிகர் சங்கத் தலைவர் நாசருக்கு டாக்டர் பட்டம்..!

தென்னிந்திய நடிகர் சங்கத் தலைவர் நாசருக்கு டாக்டர் பட்டம்..!

தனது 6 வயதிலிருந்தே நாடகங்களில் நடித்து தன் கலையுலக வாழ்கையை துவங்கியவர் நடிகர் நாசர். சிறு வயதில் இருந்தே திரைத்துறையில் நுழைய வேண்டும் என்பதையே லட்சியமாக கொண்டு இதற்காகவே திரைப்பட கல்லூரியில் நடிப்பு பிரிவில் படித்துப் பட்டம் பெற்றவர் நாசர். 1985-ம் ஆண்டு இயக்குநர் சிகம் K.பாலசந்தர் தனது  ‘கல்யாண அகதிகள்’ திரைப்படத்தில்  நாசரை ஒரு நடிகராக அறிமுகப்படுத்தினார்.

அன்றிலிருந்து கடந்த 30 வருடங்களில் தமிழ், ஆங்கிலம், மலையாளம், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில்  400-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து தன் கலையுலக பயணத்தை இன்றும் தொடர்ந்து வருகிறார் நாசர்.

இத்தனை சிறப்பு மிக்க நடிகர் நாசருக்கு பிரபல கல்வி நிறுவனமான வேல்ஸ் பல்கலைக் கழகம் ‘டாக்டர் பட்டம்’ வழங்கி கெளரவிக்கிறது.

இந்த விழா வருகிற மே 7-ம் தேதி காலை 9 மணியளவில் பல்லாவரம் வேல்ஸ் பல்கலைக் கழக வளாகத்தில் நடைபெறுகிறது. இது இந்தப் பல்கலைக் கழகத்தின் 6-வது பட்டமளிப்பு விழாவாகும்.

இந்த விழாவிற்கு வேல்ஸ் பல்கலைக்கழக நிறுவன வேந்தர் டாக்டர். ஐசரி கே.கணேஷ் தலைமையேற்கிறார். அவருடன் உச்சநீதிமன்ற நீதிபதி திரு.ஜெஸ்டி செலமேஸ்வர் சிறப்பு விருந்தினராக பங்கேற்கிறார், முன்னாள் உச்சநீதி மன்ற நீதிபதி டாக்டர் P.S.சவுகான் டாக்டர் பட்டம் வழங்க உள்ளார்.

Our Score