full screen background image

சின்னத்திரை நடிகர் சங்கத் தலைவராக நடிகர் மனோபாலா தேர்வு..!

சின்னத்திரை நடிகர் சங்கத் தலைவராக நடிகர் மனோபாலா தேர்வு..!

‘தமிழ்நாடு சின்னத்திரை நடிகர் சங்க’த்தின் புதிய தலைவராக நடிகரும், இயக்குநருமான மனோபாலா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

‘தமிழ்நாடு சின்னத்திரை நடிகர் சங்க’த்தில் தலைவராக இருந்த நடிகர் ரவிவர்மா பல்வேறு குற்றச்சாட்டுக்களால் சமீபத்தில் அந்தப் பதவியிலிருந்து நீக்கப்பட்டார்.

இதையொட்டி அந்தச் சங்க அலுவலகத்தில் நடைபெற்ற சர்ச்சையான மோதலினால் அந்தச் சங்க அலுவலகமும் போலீஸாரால் பூட்டப்பட்டது.

இதற்கடுத்து ‘தமிழ்நாடு சின்னத்திரை நடிகர் சங்கம்’ தற்காலிகமாக ‘தமிழ்நாடு சின்னத்திரை கூட்டமைப்பு’ அலுவலகத்தில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் சங்கத்தில் இதுவரையிலும் துணைத் தலைவராக பதவி வகித்து வந்த நடிகரும், இயக்குநருமான மனோபாலா சங்கத்தின் புதிய தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

இதற்காக நேற்று நடைபெற்ற சங்கத்தின் சிறப்பு செயற்குழுவில், செயற்குழு உறுப்பினர்களால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

Our Score