இந்தாண்டு நடிகர் கமல்ஹாசனின் பிறந்த நாள் விழா 3 நாட்கள் நடைபெறுகிறது..!

இந்தாண்டு நடிகர் கமல்ஹாசனின் பிறந்த நாள் விழா 3 நாட்கள் நடைபெறுகிறது..!

நடிகர் கமல்ஹாசன் திரையுலகத்தில் கால் பதித்து 60 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி இந்தாண்டு வரவிருக்கும் அவரது பிறந்த நாள் விழாவை கோலாகலமாக 3 நாட்கள் தொடர்ந்து நடத்த அவருடைய ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் முடிவு செய்துள்ளது.

இந்த விழா வரும் நவம்பர் 7, 8, 9 ஆகிய தினங்களில் நடைபெறவுள்ளது.

இதன்படி முதல் நாள் கமல்ஹாசனின் பிறந்த தினமான நவம்பர் 7-ம் தேதியன்று காலை 10.30 மணிக்கு அவருடைய சொந்த ஊரான பரமக்குடியில் அமைக்கப்பட்டுள்ள, அவருடைய தந்தை டி.சீனிவாசனின் திருவுருவச் சிலையை திறந்து  வைக்கிறார்.

அடுத்த நாள் நவம்பர் 8-ம் தேதியன்று ஆழ்வார்பேட்டையில் அமைந்திருக்கும் ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனத்தின் புதிய அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள தன்னுடைய குருவான இயக்குநர் சிகரம் கே.பாலசந்தரின் திருவுருவச் சிலையை திரையுலகப் பிரமுகர்கள் முன்னிலையில் நடிகர் கமல்ஹாசனே திறந்து வைக்கவுள்ளார். இந்த விழாவில் இயக்குநர் சிகரம் கே.பாலசந்தரின் குடும்பத்தினரும் கலந்து கொள்கிறார்கள்.

அன்று மதியம் 3.30 மணிக்கு கமல்ஹாசனின் புகழ் பெற்ற திரைப்படமான ‘ஹேராம்’ திரைப்படம் சென்னை சத்யம் திரையரங்கில் சிறப்புத் திரையிடலாக திரையிடப்படுகிறது. அத்திரையிடலின்போது திரையுலகப் பிரமுகர்கள் மற்றும் பத்திரிகையாளர்களிடம் ‘ஹேராம்’ படத்தின் உருவாக்கம் பற்றி நடிகர் கமல்ஹாசன் பேசவிருக்கிறார்.

அடுத்த நாளான நவம்பர் 9-ம் தேதியன்று ‘இசைஞானி’ இளையராஜாவின் இன்னிசைக் கச்சேரி ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் நடிகர் ரஜினிகாந்தும் கலந்து கொள்கிறார்.

இது தொடர்பாக ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கை இது :

kamal-news-1

kamal-news-2

 

 

Our Score