“அப்பா நலமாக இருக்கிறார்”-ஸ்ருதிஹாசன்-அக்சராஹாசன் அறிவிப்பு..!

“அப்பா நலமாக இருக்கிறார்”-ஸ்ருதிஹாசன்-அக்சராஹாசன் அறிவிப்பு..!

நடிகர் கமல்ஹாசனுக்கு இன்று அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளது.

நடிகர் கமல்ஹாசனுக்கு ‘சபாஷ் நாயுடு’ படத்தின் படப்பிடிப்பில் ஏற்பட்ட விபத்தினால் காலில் உள் காயம் ஏற்பட்டது. இந்தக் காயத்திற்காக ஆபரேஷன் செய்யப்பட்டு பிளேட் வைக்கப்பட்டது.

பின்பு ஒரு வருடம் கழித்து அந்தப் பிளேட் அகற்றப்பட்டது. அதன் பின்பு மீண்டும் காலில் வலி வந்துள்ளதால் அதற்காக சிகிச்சை பெற்றார். இந்தச் சிகிச்சைக்கான ஒரே தீர்வு மறுபடியும் ஒரு ஆபரேஷன் மட்டுமே என்று மருத்துவர்கள் கூறியிருந்தனர்.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 4-வது சீஸன் மற்றும் தனது கட்சியின் முதற்கட்ட தேர்தல் பிரச்சார வேலைகள் குறுக்கே வந்ததால் அவைகள் முடியும்வரைக்கும் காத்திருந்த கமல்ஹாசன் முதலில் காலுக்கு சிகிச்சை பெற முடிவு செய்திருந்தார்.

அதேபோல் நேற்றைக்கு போரூரில் உள்ள ராமச்சந்திரா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அட்மிட் ஆனார். அவருக்கு இன்று காலை காலில் ஆபரேஷன் நடைபெற்றதாகவும் கமல்ஹாசன் நல்ல உடல் நலத்துடன் இருப்பதாகவும், கமல்ஹாசனின் மகள்களான ஸ்ருதிஹாசனும், அக்சராஹாசனும் ஒரு அறிக்கை மூலமாகத் தெரிவித்துள்ளனர்.

Our Score