full screen background image

‘களத்தில் சந்திப்போம்’ படம் ஜனவரி 28-ல் ரசிகர்களை சந்திக்க வருகிறது..!

‘களத்தில் சந்திப்போம்’ படம் ஜனவரி 28-ல் ரசிகர்களை சந்திக்க வருகிறது..!

வரும் ஜனவரி 28, வியாழக்கிழமையன்று தைப்பூசத் திருவிழா வருகிறது என்பதோடு அதே நாளில் தமிழகத்தில் அரசு விடுமுறையாகவும் அறிவிக்கப்பட்டிருப்பதால் எப்போதும் வெள்ளிக்கிழமையன்று வெளியாக வேண்டிய அந்த வாரத்திய திரைப்படங்கள் அந்த ஜனவரி 28, வியாழக்கிழமையே வெளியாகவுள்ளன.

அன்றைக்கு சிபிராஜ் நடித்த கபடதாரி’ திரைப்படம் திரைக்கு வருவதாக அறிவிக்கப்பட்டிருக்கும் சூழலில், இப்போது தயாரிப்பாளர் ஆர்.பி.செளத்ரியின் ‘களத்தில் சந்திப்போம்’ படமும் திரைக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆர்.பி.சௌத்ரியின் சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரித்துள்ள 90-வது படம் இது.

இந்தப் படத்தில் ஜீவா, அருள்நிதி இருவரும் கதாநாயகர்களாக முதன்முறையாக இணைந்து நடித்திருக்கிறார்கள். கதாநாயகிகளாக மஞ்சிமா மோகன், பிரியா பவானி சங்கர் நடித்துள்ளனர். மேலும், படத்தில் காரைக்குடி செட்டியாராக அப்பச்சி’ என்ற வித்தியாசமான ஒரு வேடத்தில்  ராதாரவி நடித்துள்ளார்.

இவர்களுடன் ரோபோ சங்கர், பால சரவணன் நகைச்சுவை வேடத்திலும் இளவரசு, ‘ஆடுகளம்’ நரேன், மாரிமுத்து, வேல ராமமூர்த்தி, ரேணுகா, ஸ்ரீரஞ்சனி, ‘பூலோகம்’ ராஜேஷ், பெனிடோ ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் பிசாசு’ பட புகழ் பிரக்யா மார்ட்டின் கௌரவ வேடத்தில் தோன்றுகிறார்.

கதை – திரைக்கதை – எழுத்து – இயக்கம்  – N.ராஜசேகர், தயாரிப்பு – சூப்பர் குட் பிலிம்ஸ். வசனம் –  ஆர்.அசோக், இசை – யுவன் சங்கர் ராஜா, பாடல்கள் – பா.விஜய், விவேகா, ஒளிப்பதிவு – அபிநந்தன் ராமானுஜம், படத் தொகுப்பு – தினேஷ் பொன்ராஜ், கலை இயக்கம் –  M.முருகன், நடன  இயக்கம் –  ராஜு சுந்தரம், சண்டை இயக்கம் –  பிரதீப், நிர்வாக தயாரிப்பு – ஸ்ரீநாத் ராஜாமணி, தயாரிப்பு மேற்பார்வை – புதுக்கோட்டை M.நாகு, R.ரமேஷ்.

இந்தக் களத்தில் சந்திப்போம்’ திரைப்படம் இரண்டு நண்பர்களுக்குள் உள்ள நட்பை மையமாக வைத்து எடுக்கப்பட்ட அதிரடி, ஆக்சன் கமர்சியல் படமாக  உருவாகியுள்ளது. நட்பு, காதல், நகைச்சுவை, அதிரடி என அனைத்து அம்சங்களும் பொருந்திய படம் இது. நீண்ட நாட்களுக்குப் பிறகு இப்படி ஒரு பிரம்மாண்டமான நடிகர் கூட்டத்துடன் ஒரு படம் இப்போதுதான் திரைக்கு வர இருக்கிறது.

வருகின்ற ஜனவரி 28-ம் தேதி இத்திரைப்படம் வெளியாகிறது.

Our Score