இன்று காலை வடபழனி கமலா திரையரங்கில் நடைபெற்ற ‘தற்காப்பு’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் கார்த்தி கலந்து கொண்டு இசைத்தட்டை வெளியிட்டார்.
அப்போது அவர் பேசும்போது, “இந்தப் படத்தின் பெயர் ‘தற்காப்பு’. போஸ்டரைப் பார்த்தாலே ‘தற்காப்பு’ நல்ல படம் எனபதுபோல் தெரிகிறது. நம்பிக்கை வருகிறது. லிங்குசாமி சார் அடிக்கடி சொல்வார், ‘ஒரு படம் நல்ல படமா இல்லையா என்பது போஸ்டரிலேயே தெரியும்’ என்று..!
எனக்கும் என் அப்பா பற்றிய நினைவு வருகிறது. அப்பா அடிக்கடி சொல்வார், ‘அப்பாவிடமும், குருவிடமும் பாராட்டை எதிர்பார்க்கக் கூடாது. அப்படி ஒரு பாராட்டு வரவே கூடாது. பாராட்டு வராதவரைதான் வேலை செய்வோம்’ என்று.
எனக்கு சக்தியை நன்றாகத் தெரியும். ஸ்டண்ட் க்ளாஸில் பார்ப்பேன். நானும் விளையாட்டுகளில் ஈடுபடுவதில்லை ஆனால் முயன்றால் முடியும். எதுவும் பத்து நாள் வரவில்லையென்றால் முயன்றால் பதினொன்றாவது நாள் நிச்சயம் வரும். முயற்சியை மட்டும் கைவிடக்கூடாது. உடனேயே வெற்றி வராது. ஆனால் முயற்சி கவனிக்கப்படும். இதைத்தான் நானும் செய்கிறேன். சக்திக்கும் சொல்கிறேன். ” என்றார்.









