இயக்குநர் ரத்தின சிவா இயக்கும் புதிய படத்தில் ஜீவா நடிக்கிறார்..!

இயக்குநர் ரத்தின சிவா இயக்கும் புதிய படத்தில் ஜீவா நடிக்கிறார்..!

நடிகர் ஜீவா வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் ஐசரி கே.கணேஷ் தயாரிக்கும் புதிய படத்தில் நடிக்கவிருக்கிறார். இந்தப் படத்தை ‘றெக்க’ படத்தை இயக்கிய இயக்குநர் ரத்தினசிவா இயக்கவுள்ளார்.

தயாரிப்பாளர் ஐசரி கே.கணேஷ் தற்போது ‘LKG’, ‘பப்பி’, ஜெயம் ரவி நடிப்பில் பிரதீப் ரங்கநாதன் இயக்கும் படம் உட்பட இன்னும் சில திரைப்படங்களை தயாரித்து வருகிறார்.

டி.இமான் இசையமைக்க, பிரசன்னா குமார் ஒளிப்பதிவு செய்கிறார். கிஷோர் படத் தொகுப்பும், கணேஷ் சண்டை பயிற்சியையும் கவனிக்கின்றனர். தற்போது கதாநாயகியை தேடும் படலம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

நடிகர் ஜீவா தற்போது ‘கீ’ (டெக்னோ), ‘ஜிப்சி’ (ட்ராவல்) மற்றும் ‘கொரில்லா’ (அட்வென்சர்) ஆகிய மூன்று வித்தியாசமான படங்களில் நடித்து வருகிறார். ஆனால் இந்தப் படம் முழுக்க, முழுக்க கமர்சியல் திரைப்படமாக உருவாகப் போகிறது.

இந்தப் படம் பற்றிப் பேசிய இயக்குநர் ரத்தின சிவா, “ஜீவா சார் மிகச் சிறந்த நடிகர். ஆக்‌ஷன், எமோஷன், நகைச்சுவை மற்றும் காதல் ஆகியவற்றை திறம்பட, நேர்த்தியாக எந்த சிரமமின்றி கொடுக்க கூடியவர். இந்த படம் அவரின் முழு திறமையையும் வெளிக்கொணரும் படமாக இருக்கும்.

ஸ்கிரிப்ட் இறுதி வரைவு முடிந்தவுடன், நான் வேறுபட்ட உணர்ச்சிகளை வெளிக்கொண்டு வரும் ஒரு சிறந்த நடிகரை தேடினேன். தற்செயலாக நான் ஜீவா அவர்களை சந்தித்து, உரையாடும்  ஒரு சந்தர்ப்பம் அமைந்தது.

நான் இந்தப் படத்தின் கதையை சொன்னவுடனே, அவருக்கு மிகவும் பிடித்து போனது. அவர் தனது தற்போதைய படங்கள் அனைத்தும் அழுத்தமான, திரில்லர் படங்களாக  இருப்பதால் உடனடியாக ஒரு கமெர்சியல் படம் செய்ய வேண்டும் என்று நினைத்தார். இந்த படம் ஜீவாவை மீண்டும் பழைய ‘மாஸ்’ ஏரியாவுக்கே கொண்டு போய் சேர்க்கும்…” என்றார்.

ஐசரி கணேஷ் சார் எனக்கு ஒரு முழுமையான சுதந்திரத்தை வழங்கியுள்ளார். அது ஒரு நம்பகமான, சிறந்த திரைப்படத்தை வழங்குவதற்கு ஒரு தீவிர பொறுப்பை எனக்கு வழங்கியிருக்கிறது” என்றார்.

மாயவரம் அருகில் இருக்கும் ஒரு கிராமத்தின் பின்னணியில், உண்மை சம்பவங்களை மையப்படுத்தி  உருவாகும் இந்த படம் நட்பின் சாரத்தை கொண்டிருக்கும். அந்தக் கிராமம்தான் இயக்குநரின் தாயாரின் சொந்த ஊர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு நாளை முதல் சென்னையில் ஆரம்பமாகிறது.

Our Score