full screen background image

“அமைதியாக இருக்க வேண்டும் என்பதை விஜய்யிடம் இருந்துதான் கற்றுக் கொண்டேன்…” – நடிகர் தனுஷ் பேச்சு..!

“அமைதியாக இருக்க வேண்டும் என்பதை விஜய்யிடம் இருந்துதான் கற்றுக் கொண்டேன்…” – நடிகர் தனுஷ் பேச்சு..!

இளைய தளபதி விஜய் நடிப்பில் உருவாகியிருக்கும் புதிய படம் ‘மெர்சல்.’ வரும் தீபாவளி தினத்தன்று வெளியாகவிருக்கும் இந்தப் படத்தை இயக்குநர் அட்லி இயக்கியுள்ளார்.

ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருக்கும் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா, நேற்று மாலை சென்னை நேரு விளையாட்டு அரங்கத்தில் நடந்தது.

இந்த நிகழ்வில் படத்தின் நடிகர்கள், கலைஞர்கள், திரைப் பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் கலந்து கொண்டனர். நடிகர் தனுஷ், இயக்குநர் பார்த்திபன், நடிகர்கள் சிபிராஜ், சாந்தனு பாக்யராஜ், நடிகைகள் காஜல் அகர்வால், சமந்தா ஆகியோரும் பங்கேற்றனர்.

mersal-function-stills-3

விழாவுக்கு முன்பாகவே வந்த இளைய தளபதி  விஜய், வாசலில் நின்றபடியே விழாவுக்கு வந்த அனைத்து பிரபலங்களையும் கை குலுக்கி வரவேற்றார்.

படக் குழுவினர் மட்டுமல்லாது சினிமா பிரபலங்கள் மற்றும் ரசிகர்களும் பெருமளவில் விழா அரங்கில் குவிந்திருந்தனர். மேடையில் ஒவ்வொரு நட்சத்திரமும் வரும்போது ரசிகர்கள் ஆரவாரத்துடன் அவர்களை வரவேற்றனர்.

விழாவில் நடிகர் தனுஷ் பேசும்போது, “தேனாண்டாள் பிலிம்ஸின் 100-வது படமாகவும், விஜய் மற்றும் ஏ.ஆர்.ரஹ்மான் இருவரின் 25-வது ஆண்டாகவும் ஒரே படம் அமைத்திருப்பதில் எனக்கும் மகிழ்ச்சி. விஜய்யின் நண்பராகவும், ஏ.ஆர்.ரஹ்மானின் ரசிகனாகவும்தான் இந்த விழாவில் நான் கலந்து கொண்டுள்ளேன்.

விஜய்யிடம் எனக்கு மிகவும் பிடித்த விஷயம். நம் தோளில் கை போட்டு பேசுவார். அதே போல் அவரது தோளில் கை போடவிட்டும் பேசுவார். இது போன்றதொரு குணம், நல்ல மனசு இருக்கும் நண்பனால்தான் முடியும்.

ஒரு இரும்பு சுத்தியலால் அடிவாங்கி கத்தியாக மாறி ஷார்ப்பாக இருக்கிறார் விஜய். இங்கு மிகவும் அமைதியாக உட்கார்ந்திருக்கிறார் விஜய். இந்த அமைதி எனக்கு மிகவும் பிடிக்கும். உலகிலேயே அமைதிதான் மிகச் சிறந்த ஆயுதம் என்று சொல்வார்கள். அதை விஜய்யிடமிருந்து கற்றுக் கொண்டேன். இந்த விழாவில் விஜய் ரசிகர்களான உங்களையெல்லாம் நேரில் சந்தித்ததில் மகிழ்ச்சியடைகிறேன்..” என்றார்.

Our Score