வரும் ஜனவரி 13-ம் தேதியன்று திரைக்கு வரவிருக்கும் நடிகர் விஜய்யின் ‘மாஸ்டர்’ படத்திற்கு இப்போதே பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது.
விஜய்யின் ரசிகர்கள், பொதுமக்கள், சினிமா ரசிகர்களையும் தாண்டி திரையுலகப் பிரபலங்கள் பலருமே ‘மாஸ்டர்’ படத்திற்காகக் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.
நடிகர் தனுஷும் ‘மாஸ்டர்’ வருகைக்காக தான் பெரும் ஆவலுடன் காத்துக் கொண்டிருப்பதாகத் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், “விஜய் சாரின் ‘மாஸ்டர்’ படம் ஜனவரி 13-ம் தேதி வெளியாவது சினிமா காதலர்களுக்கு சிறந்த செய்தி. நண்பர்கள், குடும்பத்தினருடன் இணைந்து தியேட்டர்களுக்குச் சென்று படம் பார்ப்பது தியேட்டர் கலாச்சாரத்தை மீண்டும் வளர்க்க உதவும் என்று நம்புகிறேன். தியேட்டர் அனுபவம் போல வேறு எதுவும் இல்லை. தயவு செய்து அனைத்து பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் படத்தைத் தியேட்டர்களில் பாருங்கள்..” என்று குறிப்பிட்டிருக்கிறார்.