full screen background image

புத்தாண்டையொட்டி ‘வியட்நாம் வீடு’, ‘புதுப்பேட்டை’, ‘ஆயிரத்தில் ஒருவன்’ – திரைப்படங்கள் ரிலீஸ்..!

புத்தாண்டையொட்டி ‘வியட்நாம் வீடு’, ‘புதுப்பேட்டை’, ‘ஆயிரத்தில் ஒருவன்’ – திரைப்படங்கள் ரிலீஸ்..!

அடு்த்தாண்டு ஜனவரி 13-ம் தேதியன்று நடிகர் விஜய்யின் ‘மாஸ்டர்’ திரைப்படம் திரைக்கு வரவிருப்பது அனைவரும் அறிந்ததே.

அந்த நாள்வரையிலும் தியேட்டர்களில் படங்களை ஓட்டியாக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்கள் திரையரங்கு உரிமையாளர்கள்.

சென்ற வாரம் வெளியான 11 புதிய தமிழ்த் திரைப்படங்களில் ‘சியான்கள்’, ‘ஷகிலா’வைத் தவிர மற்றைய படங்களுக்கு இரட்டை இலக்கத்தில்கூட கூட்டம் வரவில்லை. பல ஊர் தியேட்டர்களில் சில காட்சிகளையே ரத்து செய்திருக்கிறார்கள்.

இதனால், வருடத்தின் கடைசி நாளான டிசம்பர் 31-ம் தேதி சில புதிய படங்களை வெளியிட்டாக வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளானார்கள் தியேட்டர் உரிமையாளர்கள்.

இந்த நேரத்தில் பழைய, ஆனால் பெருமைமிக்க திரைப்படங்களை மீண்டும் திரையிட்டால் என்ன என்று சில தயாரிப்பாளர்கள் யோசித்திருக்கிறார்கள். இதன் விளைவாக சில பழைய, ஆனால் குறிப்பிடத்தக்க திரைப்படங்கள் இப்போது மீண்டும் திரைக்கு வரவிருக்கிறது.

இந்த வரிசையில் நடிகர் திலகம் சிவாஜி நடித்த ‘வியட்நாம் வீடு’ படத்தை டிஜிட்டல் வடிவத்தில் டிசம்பர் 31-ம் தேதி திரைக்குக் கொண்டு வருகிறார்கள்.

அதே நேரம் செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடித்து சூப்பர் டூப்பர் ஹிட்டடித்த ‘புதுப்பேட்டை’ படமும் டிசம்பர் 31-ம் தேதி வெளியாகவிருக்கிறது.

இதற்கடுத்த இன்ப அதிர்ச்சியாக செல்வராகவன் இயக்கத்தில் கார்த்தி, ஆண்ட்ரியா, ரீமா சென் நடிப்பில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்திய ‘ஆயிரத்தில் ஒருவன்’ திரைப்படமும் வரும் டிசம்பர் 31-ம் தேதியன்றே வெளியாகிறதாம்.

தமிழ் ரசிகர்களைப் புத்தாண்டைக் கொண்டாட வைக்க இப்படியும் சில முடிவுகளை எடுத்தாக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது தமிழ்த் திரையுலகம்.

Our Score