“வேலு நாச்சியாராக நான் நடிக்கிறேனா..?” – நடிகை நயன்தாரா மறுப்பு..!

“வேலு நாச்சியாராக நான் நடிக்கிறேனா..?” – நடிகை நயன்தாரா மறுப்பு..!

சிவகங்கை சீமையின் ராணியான வேலு நாச்சியாரின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு புதிதாக ஒரு திரைப்படம் உருவாகவிருக்கிறது. இதற்கான அறிவிப்புகூட நேற்றைக்கு வெளியானது.

இத்திரைப்படத்தில் நடிகை நயன்தாரா, வேலு நாச்சியார் வேடத்தில் நடிக்கவிருப்பதாகவும் செய்திகள் வெளியாகின.

ஆனால், இதனை நடிகை நயன்தாரா முற்றிலுமாக மறுத்திருக்கிறார்.

இது குறித்து தனது செய்தித் தொடர்பாளர் மூலமாக அறிக்கை வெளியிட்டுள்ளார் நடிகை நயன்தாரா.

அந்த அறிக்கையில், “சில பத்திரிகைகளில், இணையத்தளங்களில் நடிகை நயன்தாரா வரலாற்றுப் படமான ‘வேலு நாச்சியார்’ படத்தில் அந்த வேடத்தில் நடிக்கவிருப்பதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.

இது முற்றிலும் தவறான செய்தி. நயன்தாரா அந்தப் படத்தில் நடிக்கவில்லை. இது போன்ற செய்தியை வெளியிடுவதற்கு முன்பாக செய்தியாளர்கள் எங்களை போனிலோ, மெஸேஜ் மூலமாகவோ, மெயில் மூலமாகவோ தொடர்பு கொண்டு கேட்டுத் தெரிந்து கொண்டு செய்தியை வெளியிடுவது நல்லது..” என்று குறிப்பிட்டிருக்கிறார்கள்.

Our Score