இன்று பிப்ரவரி 13, 2015 வெள்ளிக்கிழமையன்று 3 நேரடி தமிழ்ப் படங்களும் 1 ஹிந்தி டப்பிங் படமும் ரிலீஸாகியுள்ளது.
1. அனேகன்
ஏ.ஜி.எஸ். நிறுவனத்தின் சார்பில் கல்பாத்தி அகோரம் தயாரித்திருக்கும் இப்படத்தில் தனுஷ் ஹீரோவாகவும், அமைரா தாஸ்தூர் ஹீரோயினாகவும் நடித்திருக்கின்றனர். மேலும் அதுல் குல்கர்னி, கார்த்திக் இருவரும் மிக முக்கியமான கேரக்டரில் நடித்துள்ளனர். ஓம்பிரகாஷ் ஒளிப்பதிவு செய்ய.. ஆண்டனி படத்தொகுப்பு செய்திருக்கிறார். எழுத்தாளர்கள் சுபா திரைக்கதை வசனம் எழுத, கே.வி.ஆனந்த் படத்தை இயக்கியிருக்கிறார்.
2. இது மனிதக் காதல் அல்ல
Blacksea Movies தயாரித்திருக்கும் இப்படத்தில் அக்னி ஹீரோவாகவும், தருஷி ஹீரோயினாகவும் நடித்திருக்கின்றனர். மேலும், நாசர், மனோபாலாவும் நடித்துள்ளனர். பாரதிராஜன் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். ஷமீர் இசையமைத்திருக்கிறார். எழுதி இயக்கியிருக்கிறார் அக்னி.
3. மண்டோதிரி
ஏபி தட்சிணாமூர்த்தி-ஜோதி பிலிம்ஸ் சர்க்யூட் இப்படத்தைத் தயாரித்திருக்கிறது. புதுமுகங்களே நடித்திருக்கும் இப்படத்திற்கு ஒளிப்பதிவு டி.மகிபாலன். எழுதி, இசையமைத்து இயக்கியிருப்பவர் ஆர்.ஷம்பத்.
4. MESSENGER OF GOD – ஹிந்தி டப்பிங் படம்.