நகைச்சுவை நடிகர் போண்டா மணி முதல்முறையாக கதாநாயகனாக நடிக்கும் புதிய படம் ‘சின்ன பண்ணை பெரிய பண்ணை.’
இந்தப் படத்தை S ஃபிலிம்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் தனசேகர் தயாரித்திருக்கிறார்.
இந்தப் படத்தில், ஆதேஷ் பாலா, இயக்குநர் பகவதி பாலா, ஷர்மிளா, பிரமோஸ் தாஸ், கண்ணாயிரம், கேபிள் சங்கர், செளந்தர் மேலும் பலர் நடித்துள்ளனர்.
ஒளிப்பதிவு – A.C.அன்பு மாஸ் – முத்து.G., படத் தொகுப்பு – ராம்நாத்(சாய் ஸ்டுடியோ), இணை இயக்கம் – அருங்கால் ரவி, உதவி இயக்குநர்கள் – ஆனந்தன் – யுவன் சதிஷ், மக்கள் தொடர்பாளர் – மதிஒளி குமார், எழுத்து, இயக்கம் – பகவதி பாலா.
இந்த ‘சின்ன பண்ணை பெரிய பண்ணை’ படத்தின் படப்பிடிப்பு முழுவதும் மிகக் குறுகிய காலத்தில் முடிவடைந்து, தற்போது படத் தொகுப்பு பணிகள் துவங்கியுள்ளன.












