full screen background image

அதர்வாவுக்கு ஜோடியாக 4 ஹீரோயின்களாம்..!

அதர்வாவுக்கு ஜோடியாக 4 ஹீரோயின்களாம்..!

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் செயலாளரும், மூத்த தயாரிப்பாளர்களில் ஒருவருமான டி.சிவா தனது அம்மா கிரியேஷன்ஸ் நிறுவனத்தின் சார்பில் 20-க்கும் மேற்பட்ட படங்களை தயாரித்துள்ளார்.

t-siva-3

இவருடைய அம்மா கிரியேஷன்ஸ் நிறுவனத்திற்கு இந்த 2016-ம் வருடம் வெள்ளி விழா ஆண்டாகும். இதையொட்டி தற்போது மிக பிரம்மாண்டமான செலவில் ‘ஜெமினிகணேசனும் சுருளிராஜனும்’ என்ற படத்தைத் தயாரித்து வருகிறார் டி.சிவா.

இந்தப் படத்தை  2 MB நிறுவனம் சார்பாக ரகுநாதன் P.S.R.சந்திரசேகர் மற்றும் R.சரவணகுமார் ஆகியோரும் இணைந்து தயாரிக்கிறார்கள். ‘BIG PRINT PICTURES’ சார்பாக I.B. கார்த்திகேயன், திலிபன் செங்கோட்டையன், D.பரஞ்சோதி ஆகியோர் நிர்வாக தயாரிப்பை கவனிக்கிறார்கள்.

geminiganesan-surulirajan-2 

அதர்வா கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகிகளாக ரெஜினா கேஸன்ட்ரா, ப்ரணீதா, ஐஸ்வர்யா ராஜேஷ், ஆனந்தி ஆகிய நால்வரும் நடிக்கிறார்கள். காமெடி நடிகர்கள் சூரியும், ‘நான் கடவுள்’ ராஜேந்திரனும் முதன் முறையாக இந்தப் படத்தில்தான் இணைந்து நடிக்கிறார்கள். மேலும், நடிகர் மயில்சாமியும் ஒரு முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார்.

இசை – டி.இமான், பாடல்கள் – யுகபாரதி, படத்தொகுப்பு – பிரவீன் K.L, கலை இயக்குனர் – வைரபாலன், ஒளிப்பதிவு – ஸ்ரீ சரவணன், கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் – ஓடம் ஜெ.இளவரசு.

இத்திரைப்படம் பற்றி இயக்குநர் ஓடம் ஜெ.இளவரசு பேசும்போது, “காதலுக்கும், நகைச்சுவைக்கும் முக்கியத்துவம் கொடுத்து இப்படம் உருவாகி வருகிறது. மேலும் பெண்களின் முதல் காதல் அவர்களின் வாழ்கையில் எவ்வளவு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதையும் அழுத்தமாகவும், உணர்வுப்பூர்வமாகவும், நகைச்சுவையாகவும் பதிவு செய்திருக்கிறோம். இதன் முதற்கட்டப் படப்பிடிப்பு மதுரையில் சிறப்பாக நடந்து முடிந்தது. இப்போது இரண்டாம் கட்ட படப்பிடிப்பு ஊட்டியில் நடைபெற்று கொண்டிருக்கிறது. வரும் டிசம்பர் மாதம் படம் வெளியாக இருக்கிறது..” என்றார்.

Our Score