WHITE HORSE PRODUCTION சார்பில் ஜி.செளண்டையன், ஆர்.பிரகாஷ், ஜி.சுமன் ஆகியோர் இணைந்து தயாரிக்கும் புதிய திரைப்படம் ‘கள்ளாட்டம்’.
இதில் நந்தா ஹீரோவாக நடித்திருக்கிறார். ரிச்சர்டு இன்னுமொரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். மேலும் இளவரசு, குமார நடராஜன், ஏழுமலை, சரிகா, உஷாஸ்ரீ, மேக்னா ஆகியோரும் நடித்திருக்கிறார்கள்.
இசை – உமர் எழிலன், படத் தொகுப்பு – வி.டி.விஜயன், கலை இயக்கம் – மோகன மகேந்திரன், எழுத்து, ஒளிப்பதிவு, இயக்கம் – ஜி.ரமேஷ். இவர் ‘கிங்’, ‘திருடா திருடி’, ‘புதுக்கோட்டையிலிருந்து சரவணன்’, ‘ஆழ்வார்’ ஆகிய படங்களுக்கு ஒளிப்பதிவு செய்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
“காவல்துறை மக்களின் நண்பன் என்பதை உறுதிப்படுத்திச் சொல்லும் கதை இது. காவல்துறையினர் வித்தியாசமான அணுகுமுறையில் குற்றவாளிகளை எப்படி பிடித்து நீதியின் முன் நிறுத்தி தண்டனை பெற்றுத் தருகிறார்கள் என்பதை சுவாரசியமான திரைக்கதையில் சொல்லும் படம் இது. வில்லனின் சூழ்ச்சியால் மாட்டிக் கொண்ட ஒரு குழந்தையின் உயிரை காவல்துறையின் உதவியோடு ஹீரோ எப்படி காப்பாற்றுகிறார் என்பதாக படம் செல்கிறது. விரைவில் படத்தின் இசை வெளியீட்டு விழாவும், அதைத் தொடர்ந்து படத்தின் வெளியீடும் நடைபெறவுள்ளது..” என்கிறார் இயக்குநர் ஜி.ரமேஷ்.











