இயக்குனர் சிகரம் கே.பாலசந்தர் மறைவுக்கு பாலிவுட் நடிகர் அமீர்கான் இரங்கல் தெரிவித்துள்ளார்.
அவர் தனது டுவிட்டர் பக்கம் மூலம் இரங்கல் செய்தியை வெளியிட்டுள்ளார்.
“கே.பாலச்சந்தர் அவர்களின் மறைவு தமிழ் சினிமாவுக்கு மட்டுமல்ல, ஒட்டு மொத்த இந்திய சினிமாவுக்கும் பேரிழப்பு. சினிமா துறைக்கு அவர் ஆற்றியுள்ள சேவை மகத்தானது. என்னிடம் அவர் காட்டிய பெருந்தன்மையும், அரவணைப்பும் என்றும் என் நினைவில் நீங்காமல் நிலைத்திருக்கும்.
மிகுந்த பணிவு கொண்ட பெரியவர் அவர். என்னுடைய 25 வருட சினிமா வாழ்வில் அவருடன் கலந்துரையாடிய மாலை பொழுதை என்றும் என்னால் மறக்க இயலாது. அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கு எனது இதயப்பூர்வமான இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்..” என்று அந்தச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.