விஜய்வசந்தின் அடுத்தப் படம் ‘அச்சமின்றி..!’

விஜய்வசந்தின் அடுத்தப் படம் ‘அச்சமின்றி..!’

‘என்னமோ நடக்குது’ படத்தை அடுத்து டிரிபிள் வி ரெகார்ட்ஸ் V.வினோத்குமார் ’அச்சமின்றி’ என்ற படத்தினைத் தயாரித்து வருகிறார்.

இதிலும் விஜய் வசந்தே கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக சிருஷ்டி டாங்கே நடிக்கிறார். முக்கிய வேடம் ஒன்றில் சமுத்திரகனி நடிக்கிறார். நகைச்சுவை வேடத்தில் கருணாஸ் நடிக்கிறார். மற்றும் ராதாரவி, சரண்யா பொன்வண்ணன், பரத் ரெட்டி, சைவம் வித்யா, தேவதர்ஷினி, கும்கி அஸ்வின், ஜெயகுமார் ஆகியோரும் நடித்திருக்கிறார்கள்.

ஒளிப்பதிவு – A.வெங்கடேஷ்

இசை – பிரேம்ஜி அமரன்

கலை – சரவணன்

ஸ்டண்ட் – கணேஷ் குமார்

எடிட்டிங் – பிரவீன்.K.L

தயாரிப்பு மேற்பார்வை – சொக்கலிங்கம்

வசனம் – ராதாகிருஷ்ணன் .

இவர் ‘என்னமோ நடக்குது’, ‘ஆம்பள’ போன்ற படங்களுக்கு வசனம் எழுதியவர்.

தயாரிப்பு – டிரிபிள் வி ரெகார்ட்ஸ் V.வினோத்குமார்.

கதை, திரைக்கதை, இயக்கம் – ராஜபாண்டி.

படம் பற்றி இயக்குனர் ராஜபாண்டியிடம் கேட்டபோது, “தற்போது படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. மீனம்பாக்கம் பின்னி மில்லில் பிரமாண்டமான அரங்குகள் அமைக்கப்பட்டு படப்பிடிப்பு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. பரத்ரெட்டி, சேரன்ராஜ், ஜெயகுமார், ஆகிய மூன்று வில்லன்களின் அடியாட்களுடன் மோதி விஜய் வசந்தும் – சிருஷ்டி டாங்கேவும் தப்பிப்பது போன்று சண்டை காட்சிகள் படமாக்கப்பட்டன.

இந்த சண்டை காட்சியின்போது எந்தவித பாதுகாப்பு உபரணங்களும் இன்றி சிருஷ்டி டாங்கே பங்கேற்றதால் அவரது கால்களில் பலத்த அடிபட்டது. உடனடியாக அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு தொடர்ந்து படப்பிடிப்பு நடைபெற்றது..” என்றார்.

“இன்றைய கால கட்டத்திற்கு தேவையான ஒரு கருத்தை கமர்ஷியலாக ‘அச்சமின்றி’ உருவாக்குகிறோம்..” என்றார்கள் நாயகன் விஜய் வசந்தும், தயாரிப்பாளர் வினோத்குமாரும்.

Our Score