தமிழக அரசிடம் அனுமதி வாங்கி கேரளாவில் ஷூட்டிங் நடத்தச் சென்ற அதிசயம்..!

தமிழக அரசிடம் அனுமதி வாங்கி கேரளாவில் ஷூட்டிங் நடத்தச் சென்ற அதிசயம்..!

தாருநிஷா மூவீஸ் நிறுவனம் சார்பாக ஞானதேஷ் அம்பேத்கார் வழங்க A. சங்கரபத்மா தயாரித்திருக்கும் ‘அச்சாரம்’ திரைப்படத்தின் பணிகள் அனைத்தும் முடிவடைந்து படம் திரைக்கு வரும் நிலையில் உள்ளது.

இந்த படத்தில் கணேஷ் வெங்கட்ராம், முன்னா இருவரும் கதாநாயகர்களாக நடித்திருக்கிறார்கள். கதாநாயகிகளாக பூனம்கவுர், ஐஸ்வர்யா தத்தா இருவரும் நடித்திருக்கிறார்கள். மற்றும் ஞானதேஷ், ரேகா, ராஜலட்சுமி, O.A.K.சுந்தர் ஆகியோரும் நடித்திருக்கிறார்கள்.

ஒளிப்பதிவு – R.K.பிரதாப்

இசை –  ஸ்ரீகாந்த் தேவா

பாடல்கள் – யுகபாரதி

கலை – T. சந்தானம்

எடிட்டிங் – சுரேஷ் அர்ஸ்

நடனம் – ராபர்ட், ரேகா, ராஜ்விமல்

ஸ்டண்ட் – ஸ்பீட் சையத்

தயாரிப்பு – A. சங்கரபத்மா.

கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் – மோகன் கிருஷ்ணா

படம் பற்றி இயக்குனர் மோகன் கிருஷ்ணா பேசும்போது, “நடிகர் கணேஷ் வெங்கட்ராமன் இதில் ஒரு டெரர் வேடத்தில் நடித்திருக்கிறார். இந்த வேடம் அவருக்கு மிகவும் புதியது. இருந்தாலும் அதை சிறப்பாக செய்திருக்கிறார்.

அச்சாரம் படத்திற்காக பாடல் காட்சி ஒன்றை படமாக்க கொடைக்கானல் தாண்டி ஒரு இடத்தை தேர்வு செய்தோம். ரோட்டில் இருந்து அந்த பகுதிக்கு செல்ல வாகனம் எதுவும் போகாது. கால்நடையாகத்தான் போகவேண்டும். அதற்காக காலை ஆறு மணிக்கே நடக்க ஆரம்பித்தோம்.. போய்ச் சேர பதினோரு மணியாகிவிட்டது.

கேமராவை வைத்தவுடன் வனத்துறையினர் வந்து தடுத்தார்கள் நாங்கள் அனுமதி வாங்கிய விவரத்தை காட்டினோம். நீங்கள் வாங்கி இருப்பது தமிழ்நாட்டில்.. இது கேராளா வனப்பகுதி நோ ஷூட்டிங் என்றார்கள். வேறு வழியின்றி மீண்டும் நடந்தே திரும்பி வந்தோம்.

மறுநாள் வேறு இடத்திற்கு போனோம்.. அங்கு இது வன விலங்குகள் அதிகம் நடமாடும் பகுதி. உங்கள் உயிருக்கு ஆபத்து என்று வனத்துறை அதிகாரிகள் தடுத்தார்கள். வேறு வழியில்லாமல் அன்றைக்கும் ஷூட்டிங் நடத்த முடியாமல் திரும்பினோம்.

மூன்றாவது நாள்தான் பழமுத்தூர் என்ற இடத்தில் முன்னா – பூனம்கவுர் பங்கேற்க ‘பேரழகே திருடிட பிறந்தவன் நீதான் பேசும் இரு விழிகளை உடையவன் நீதான்’ என்ற பாடலைப் படமாக்கினோம். பாட்டெடுக்க நாங்க பட்ட பாட்டை சொல்லி மாளாது. ஆனால் பாடல் சிறப்பாக வந்ததால் அந்தக் கஷ்டமெல்லாம் போயே போச்சு..” என்றார்.

Our Score