டி.என்.எஸ். தேவர் பிலிம்ஸ் என்ற பட நிறுவனம் சார்பாக T.N.S.செல்லத்துரை தேவர் தயாரிக்க கே.பி.செல்வம் இணை தயாரிப்பில் உருவாகும் படம் ‘அபூர்வ மகான்.’
இந்தப் படத்தில் ‘தலைவாசல்’ விஜய் சாய்பாபா வேடமேற்று நடிக்கிறார். மற்றும் இளம் நாயகனாக சாய் முரளியும், நாயகியாக ரஞ்சனியும் நடித்திருக்கிறார்கள். மற்றும் சுமன், பவர்ஸ்டார் சீனிவாசன், சத்யபிரகாஷ், எம்.எஸ்.பாஸ்கர், டெல்லி கணேஷ், பிரேம்குமார், அஜய்ரத்னம், பாண்டு, சிசர் மனோகர், வடிவுக்கரசி, மீரா கிருஷ்ணன், அவன் இவன் ராமராஜன், நெல்லை சிவா, போண்டா மணி, ஜோதி முருகன், விஜய் கணேஷ் ஆகியோரும் நடித்திருக்கிறார்கள். நீண்ட நாட்களுக்கு பிறகு வினு சக்கரவர்த்தி ஒரு முக்கிய கேரக்டரில் நடித்திருக்கிறார்.
எடிட்டிங் – சுரேஷ் அர்ஷ்
இசை – V. தஷி
ஸ்டன்ட் – சூப்பர் சுப்பராயன்
ஒளிப்பதிவு – G.சீனிவாசன்
கலை – S.S.சுசி தேவராஜ்
நடனம் – பவர் சிவா, மாமு சரவணன்
பாடல்கள் – அண்ணாமலை, தமிழமுதன், சினேகன். ஏம்பல் ராஜா, வேலாயுதம்.
தயாரிப்பு மேற்பார்வை – ராம்பிரபு
இணை தயாரிப்பு – K.P.செல்வம்
தயாரிப்பு – T.N.S.செல்லத்துரை தேவர்
கதை, திரைக்கதை, வசனம் இயக்கம் – கே.ஆர்.மணிமுத்து.
படம் பற்றி பேசிய இயக்குநர் மணிமுத்து, “படத்தின் அனைது வேலைகளும் முடிந்துவிட்டன. மனிதனாக பிறந்து மகானாக வாழ்ந்து மறைந்த ஷீரடி சாய் பாபா அவர்களின் வாழ்க்கை வரலாறுதான் இந்த படம்.
இந்த படத்தை வெளியிட முடிவு செய்தபோது. படத்தை பார்த்த எம்.ஆர்.கிரியேசன்ஸ் A.ஜோதி முருகன், ‘இந்தப் படத்தை நான் வாங்கி ரிலீஸ் செய்கிறேன். பாபா படத்தை ரிலீஸ் செய்வது எனக்கு கிடைத்த பாக்கியம்’ என்றார்.
ரிலீஸ் வேலைகளை தொடங்கி இமாதம் 22-ம் தேதி வெளியிடவுள்ளோம். அன்றுதான் பாபா ஜீவ சமாதி அடைந்த நாள். இவை அனைத்துமே தானாகவே நடந்துள்ளது. பாபா ஜீவ சமாதி அடைந்த நாளில் அவரது வாழ்க்கை வரலாற்று படத்தை வெளியிடுவது பாபா மீண்டும் உயிருடன் வருவது போல் எங்கள் படக் குழுவினருக்கு ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது..” என்றார்.










