full screen background image

‘கத்துக்குட்டி’க்கு விவசாயிகளிடையே பெரும் வரவேற்பு..!

‘கத்துக்குட்டி’க்கு விவசாயிகளிடையே பெரும் வரவேற்பு..!

நரேன்-சூரி நடிப்பில் இரா.சரவணன் இயக்கத்தில் உருவான ‘கத்துக்குட்டி’ படம் கடந்த 9-ம் தேதி தமிழகம் முழுவதும் வெளியானது.

பெரிய அளவிலான விளம்பரங்களோ, பரப்பரப்போ இல்லாமல் வெளியானாலும் ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பால் நாளுக்கு நாள் தியேட்டர்களில் வரவேற்பு மிகுதியாகி தற்போது 242 திரையரங்குகளில் ‘கத்துக்குட்டி’ படம் பட்டையைக் கிளப்பி ஓடிக் கொண்டிருக்கிறது.

நல்ல கருத்துக்களைச் சொன்னால் அத்தகைய படங்கள் வசூல் அள்ளாது என்கிற கடந்த கால கணக்குகளை உடைத்து வசூலிலும், வரவேற்பிலும் சாதனை படைத்து வருகிறது ‘கத்துக்குட்டி’ திரைப்படம்.

100 சதவிகித காமெடி படமாக இருந்தாலும், விவசாய நிலங்களை அழிக்கப் போகும் மீத்தேன் கொடூரத்தை மக்களுக்கு சரியாகப் புரிய வைத்ததால் இந்தப் படத்துக்கு அனைத்து தரப்பு ரசிகர்களின் ஆதரவும் பலமாகக் கிடைத்திருக்கிறது.

தஞ்சை, திருச்சி, மதுரை, கோவை உள்ளிட்ட பல பகுதிகளில் விவசாய சங்க நிர்வாகிகளும் அனைத்துக் கட்சி நிர்வாகிகளும் ‘கத்துக்குட்டி’ படத்துக்கு பெரிய அளவிலான மரியாதையை ஏற்படுத்திக் கொடுத்தனர். தஞ்சையில் விவசாய சங்க நிர்வாகிகள் படம் பார்க்க தியேட்டருக்கு வந்த அனைவருக்கும் இனிப்பு கொடுத்து வரவேற்றுள்ளனர்.

பட்டுக்கோட்டையைச் சேர்ந்த வீரசேனன் எனக்ற விவசாயி, எங்களின் வாழ்க்கையையும், வலியையும் நெஞ்சைப் பிழிகிற அளவுக்கு ‘கத்துக்குட்டி’ படம் பதிவு செய்திருக்கிறது. படம் முழுக்க யதார்த்தமும், நசைக்சுவையும் நிரம்பி வழிந்தாலும் விவசாயிகளின் சோகங்களை நெஞ்சில் ஆணியடிக்கும்விதமாக இந்தப் படம் விளக்கியிருக்கிறது.

எங்கள் மண்ணின் அழுத்தமான பதிவாக உருவாகியிருக்கம் ‘கத்துக்குட்டி’ படத்தை தமிழக மக்கள் அனைவரும் பெரும் ஆதரவு கொடுத்து கொண்டாட வேண்டும். செஞ்சோற்றுக் கடன் தீர்க்கும்விதமாக நகர மக்களும், படித்தவர்களும், படிக்காத பாமரர்களும் இந்தக் ‘கத்துக்குட்டி’ படத்துக்கு தங்களது மகத்தான ஆதரவை வழங்க வேண்டும். இந்தப் படத்தின் விவசாய ஜீவன்களுக்கான வெற்றி..” என சிலிர்ப்பாகச் சொல்லி படம் பார்க்க அனைவருக்கும் இனிப்பு கொடுத்து வரவேற்றார்.

படம் வெளியான நான்காவது நாளிலேயே மீத்தேன் திட்டத்துக்கு அனுமதி வழங்க மறுத்து தமிழக அரசு ஆணை வெளியிட்டிருப்பதை ‘கத்துக்குட்டி’ படத்துக்குக் கிடைத்த மாபெரும் வெற்றியாக அப்படத்தின் தயாரிப்பாளர்களும், இயக்குநர்களும் தெரிவித்திருக்கிறார்கள்.

ரசிகர்களின் அபரிமிதமான ஆதரவால் கத்துக்குட்டிக்கு மேலும் திரையரங்குகள் அதிகமாகும் என்று விநியோகஸ்தர்கள் தரப்பில் எதிர்பார்ப்பு நிலவுகிறது.

Our Score