கடந்த 2019-ம் ஆண்டு நடிகரும், இயக்குநருமான பார்த்திபன் தயாரித்து, இயக்கி, நடித்து வெளியான படம் ‘ஒத்த செருப்பு’. படம் முழுவதும் ஒரே ஒரு கதாபாத்திரம் மட்டுமே இடம் பெற்றிருந்தது.
வித்தியாசமான வகையில் உருவாக்கப்பட்டிருந்த இந்தப் படத்தைப் பார்த்த பல்வேறு திரையுலக பிரபலங்களும், ரசிகர்களும் பார்த்திபனை வெகுவாகப் பாராட்டினார்கள்.
இ்ப்போது இந்தப் படம் இந்தியிலும் ரீமேக் ஆகிறது. இதன் இந்தி ரீமேக்கை தயாரிப்பவர் பாலிவுட்டின் சூப்பர் ஸ்டாரான அமிதாப்பச்சன். படத்தில் பார்த்திபன் கதாபாத்திரத்தில் அமிதாப்பின் மகனான அபிஷேக்பச்சன் நடிக்கிறார். பார்த்திபனே இந்தி ரீமேக்கையும் இயக்குகிறார்.
தமிழில் பணியாற்றிய ஒளிப்பதிவாளர் ராம்ஜியே இந்தி பதிப்பிலும் ஒளிப்பதிவு செய்கிறார். மேலும் படத் தொகுப்பாளர் சுதர்சனே இந்தி ரீமேக்கிலும் பணியாற்றவிருக்கிறார்.
இந்தப் படத்தின் படப்பிடிப்பு நேற்று சென்னையில் துவங்கியது.
இந்த ‘ஒத்த செருப்பு’ படத்தை ஹாலிவுட்டிலும் ரீமேக் செய்ய தற்போது பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. விரைவில் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.