ஆதிக் ரவிச்சந்திரன்-ஜி.வி.பிரகாஷ் கூட்டணியில் அடுத்த படம் ‘வெர்ஜின் மாப்ள’

ஆதிக் ரவிச்சந்திரன்-ஜி.வி.பிரகாஷ் கூட்டணியில் அடுத்த படம் ‘வெர்ஜின் மாப்ள’

‘த்ரிஷா இல்லனா நயன்தாரா’ படத்திற்கு பின்பு இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரனும், ஜி.வி.பிரகாஷும் மீண்டும் இணைகிறார்களாம்.

இந்தப் படத்துக்கு ‘வெர்ஜின் மாப்ள’ என்று பெயர் வைத்திருக்கிறார்கள். இந்த டைட்டிலே கதை எப்படிப்பட்டது என்பதை காட்டுகிறது.

இந்தப் படம் பற்றிப் பேசிய இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன், “த்ரிஷா இல்லனா நயன்தாரா’ படத்தில் ஒரு அப்பாவி இளைஞனின் காதல் கதையைச் சொல்லியிருந்தேன். ஒரு பள்ளிக்கூட மாணவனின் முதல் அனுபவங்கள் கதையில் சொல்லப்பட்டிருந்தன.

இந்த ‘வெர்ஜின் மாப்ளை’ படத்தில் திருமணத்திற்கு முன்பு கற்புடன் இருந்த ஒரு இளைஞர், திருமணத்துக்குப் பிறகும் கற்புடன் இருக்கிறான். அது ஏன் என்பதுதான் கதை.

கணவன்-மனைவி என்ற பழைய திருமண வாழ்க்கை முறை இந்த்த் தலைமுறையினர் மத்தியில் குறைந்து கொண்டே வருகிறது. இளைய தலைமுறையின் திருமண வாழ்க்கை நிலைப்பதில்லை. விவாகரத்துகள் பெருகிக் கொண்டே போகிறது. இதற்கெல்லாம் என்ன காரணம் என்பது திரைக்கதையில் சொல்லப்படுகிறது.

ரிச்சர்டு எம்.நாதன் ஒளிப்பதிவு செய்யவிருக்கிறார். ஜி.வி.பிரகாஷே இசையமைக்கிறார். ஸ்டீபன் தயாரிக்கிறார். படத்திற்கான கதாநாயகியை தேடி வருகிறோம். கிடைத்தவுடன் அடுத்த மாதத்திலேயே படப்பிடிப்பைத் துவக்கிவிடுவோம். படப்பிடிப்பு சென்னை, ஊட்டி ஆகிய இடங்களில் நடைபெறும்..” என்றார்.