நயன்தாரா-த்ரிஷா நடிக்கும் ‘காத்துவாக்குல இரண்டு காதல்’

நயன்தாரா-த்ரிஷா நடிக்கும் ‘காத்துவாக்குல இரண்டு காதல்’

கடைசியாக மனம் கவர்ந்த மணாளனுக்கு ஒரு வேலை வாய்ப்பை உருவாக்கிக் கொடுத்துவிட்டார் நயன்தாரா.

'நானும் ரெளடிதான்' படத்திற்கு பிறகு வாய்ப்பு வேட்டை நடத்தி வந்த இயக்குநர் விக்னேஷ் சிவனுக்கு எதுவும் கிடைக்காமல் இருந்ததுதான் உண்மை. இந்த நேரத்தில் ஏ.எம்.ரத்னம் தான் தயாரிக்கும் படத்தில் நடிக்க நயன்தாராவை கேட்டு வர.. வந்த வாய்ப்பை அப்படியே தனது காதலருக்கும் தாரை வார்த்துக் கொடுத்துவிட்டார் நயன்ஸ்.

வேறொரு நடிகர் நடிக்கவிருந்த அந்த படத்தில் "விஜய் சேதுபதின்னா ஓகே.. இதை விக்னேஷே இயக்கட்டுமே.. நான் தாராளமா நடிக்கிறேன்.." என்று கொக்கி போட்டிருக்கிறார் நயன்ஸ்.

பிடிக்க முடியாத ஹீரோயின் தானே வந்து சரின்னு சொல்லும்போது சம்பளத்துலேயும், தேதிகள்லேயும் நிறைய தள்ளுபடி கிடைக்குமே என்றெண்ணி தயாரிப்பாளரும் தலையசைக்க.. பிறகென்ன விக்னேஷ் சிவன் மீண்டும் ஸ்டார்ட், கட் சொல்ல தயாராகிவிட்டார். படத்திற்கு பெயர் ‘காத்துவாக்குல இரண்டு காதல்’.

ஒரு காதலுக்கு நயன்தாரா இருக்காரு.. இன்னொன்னுக்கு, மற்றொரு முதிர் கன்னியான த்ரிஷாவை இழுத்துப் பிடித்து புக் செய்திருக்கிறார்களாம். இதுவும் நயன்ஸின் அட்வைஸ்தானாம்.. ‘த்ரிஷான்னா எனக்கு பிரச்சினையில்லை’ என்று சொன்னதன் பலன் த்ரிஷாவுக்கு லக்கு..!

ஆக.. காதலின்னு இருந்தா அது நயன்ஸ் மாதிரிதான் இருக்கணும்.. அதிர்ஷடக்கார காதலர் விக்னேஷ் சிவன்..!