தன் இசையை இசைத்துக் காட்டிய கண் பார்வயற்ற சிறுமிக்கு பரிசளித்த ஏ.ஆர்.ரஹ்மான்..!

தன் இசையை இசைத்துக் காட்டிய கண் பார்வயற்ற சிறுமிக்கு பரிசளித்த ஏ.ஆர்.ரஹ்மான்..!

செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் சார்பாக தயாரிப்பாளர் லலித்குமாரின் தயாரிப்பில் சீயான் விக்ரமின் நடிப்பில்... இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கியுள்ள திரைப்படம் 'கோப்ரா,'

இந்தப் படத்தில் இடம் பெற்றிருக்கும் ‘தும்பி துள்ளல்’ என்ற பர்ஸ்ட் சிங்கிள் பாடல் இரு தினங்களுக்கு முன் வெளியானது.

வெளியான நிமிடத்தில் இருந்தே இந்தப் பாடல் டாப் ட்ரெண்டிங்கில் இடம் பெற்றது. ஏ.ஆர்.ரஹ்மானின் அற்புத இசையில் உருவாகியிருக்கும் இந்தப் பாடல் இசை ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவைப் தற்போது 3 மில்லியன் பார்வையாளர்களை கடந்து இன்னும் வெற்றிகரமாகப்  பார்க்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் இப்பாடலை நேற்று கண் பார்வையற்ற சிறுமியான  சஹானா தனது கீ-போர்டில் மிக அழகாக வாசித்து அதனை ட்விட்டரிலும் பகிர்ந்திருந்தார். சஹானா பிறவியிலேயே கண் பார்வையற்ற சிறுமி. அவர் ஜீ தமிழ் சேனலில் ‘சரிகமபா’ நிகழ்ச்சியில் இரண்டாவதாக வந்தவர்.

அவர் கீ-போர்டில் வாசித்த பாடல் வெளியான சற்று நேரத்திலேயே டிவிட்டீரில் டிரெண்ட்டாகி பலரது பாராட்டுக்களையும் பெற்றது. அதுவும் தற்போது டிவிட்டரில்  டாப் ட்ரெண்டிங்கில் இருக்கிறது.

நேற்று இரவு சஹானாவின் வீடியோவை தற்செயலாகக் கவனித்த ‘இசைப் புயல்’ ஏ.ஆர்.ரஹ்மான் ட்விட்டரில் ‘ஸ்வீட்’ என ரீ ட்வீட் செய்து சஹானாவைப் பெரிதும் பாராட்டியிருந்தார்.

உடனே படத்தின் தயாரிப்பாளர் லலித்குமார் தன் செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் சார்பாகவும், இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் சார்பாகவும்  சிறுமி சஹானாவிற்கு விலை உயர்ந்த மைக் உள்ளிட்ட ஸ்டுடியோ செட்டப்பை பரிசாக கொடுத்து மகிழ்வித்துள்ளார்.