ராகவா லாரன்ஸ் இயக்கியிருக்கும் ‘லட்சுமி பாம்’ HOTSTAR-ல் வெளியீடு..!

ராகவா லாரன்ஸ் இயக்கியிருக்கும் ‘லட்சுமி பாம்’ HOTSTAR-ல் வெளியீடு..!

கொரோனா வைரஸ் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள காரணத்தினால் கடந்த மூன்று மாதங்களுக்கும் மேலாக இந்தியாவில் திரையரங்குகள் திறக்கப்படவில்லை.

இந்த நிலையில்  தமிழில்  பல முன்னணி நடிகர், நடிகைகளின் திரைப்படங்கள்  OTT பிளாட்பாரத்தில் ரிலீசாகி வருகின்றன. அந்த வரிசையில் ‘லட்சுமி பாம்’ படமும் இடம் பிடித்திருக்கிறது.

பிரபல நடிகரும், இயக்குநருமான ராகவா லாரன்ஸ் இயக்கி நடித்து 2011ம் ஆண்டில் தமிழில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற படம் ‘காஞ்சனா’. இந்தக் ‘காஞ்சனா’ படம்தான் தற்போது ஹிந்தியில் ‘லட்சுமி பாம்’ என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது.

இப்படத்தை கேப் அப் குட் பிலிம்ஸ் மற்றும் பாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ், ஷாபினா கான் மற்றும் தூஷ்கர் கபூர் இணைந்து தயாரித்துள்ளனர்.

இந்தப் படத்தில் அக்சய்குமாரும், கைரா அத்வானியும் ஜோடியாக நடித்துள்ளனர். ராகவா லாரன்ஸ் இயக்கியிருக்கிறார்.

இந்த ’லட்சுமி பாம்’ படத்தை நேரடியாக OTT-யில் வெளியிடப் போவதாக படக் குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். முதல் நாள்.. முதல் ஷோவாக வீட்டில் இருந்தபடியே Disney Hot Star-இல் இந்தப் படத்தைக் கண்டு மகிழலாம். படத்தின் வெளியிட்டு தேதி விரைவில் அறிவிக்கப்பட இருக்கிறது.